“பிரதமர் மோடியால் புதிய உயரத்தை எட்டியது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” – ப.சிதம்பரம்

புதுடெல்லி: பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உயரத்தை எட்டியுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரித்தக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி அரசு போய்விட்டது. சில நாட்களாக இது பாஜக சர்க்காராக இருந்தது. நேற்று முதல் அது என்டிஏ சர்க்காராக இருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் நடந்து வரும் மாற்றங்களை நீங்கள் கவனித்தீர்களா? … Read more

போதைபொருள் கடத்திய திமுக பஞ்சாயத்து தலைவரின் கணவர்: கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: குட்கா கடத்தல் வழக்கில்  தென்காசி மாவட்டம் சிவகிரி மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை  தி.மு.க.வில் இருந்து நிரந்தர நீக்கம் செய்து கட்சி  பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளளார். ஏற்கனவே போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கும், கடத்தல் காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வி. இவர் திமுகவை சேர்ந்தவர்.  இவரது கணவர் போஸ் எனப்படும் … Read more

கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் ஆவேசம்' என்கிற படம் வெளியானது. ஒரு கேங்ஸ்டர் காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 100 கோடி வசூலையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரோமாஞ்சம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரது இரண்டு படங்களிலுமே கதாநாயகிகள் என யாருமே இல்லை. அதேபோல இந்த ஆவேசம் படத்தில் … Read more

கொடுமை.. சூர்ப்பனகை மாதிரி இருக்காரு.. ராமாயணம் ஸ்டில்ஸ் லீக்.. சாய் பல்லவியை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

மும்பை: நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த ஆண்டு ராமாயணத்தை மையப்படுத்தி உருவான ஆதிபுருஷ் திரைப்படம் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. மோசமான இராமாயணத்தை இளம் தலைமுறையினருக்கு கடத்த பிரபாஸ் பார்த்துள்ள என கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதன் காரணமாகவே தற்போது அனிமல் படத்தில் படு ஆபாசமாக நடித்த ரன்பீர் கபூரை வைத்து

பா.ஜ.க. ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது ; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

அகமதாபாத், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று குஜராத் மாநிலம் தரம்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பா.ஜனதா தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களுடைய யுக்தி.அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள். சாமானிய மக்களைப் பலவீனப்படுத்தவும், நமது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும் … Read more

மே 1 வரை வட  தமிழக உள் மாவட்டங்களுக்கு வெப்ப அலை அலர்ட்!

சென்னை: அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது. கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி … Read more

“இண்டியா கூட்டணி வென்றால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம்” – மோடி பேச்சு

கோலாப்பூர்: ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களை பதவிக்கு கொண்டுவர முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசினார். மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேர்தலில் மூன்று இலக்க எண்ணிக்கையை கூட எட்டாது அல்லது ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை பெறாது. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றால், ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கொரு பிரதமரை பதவியில் அமர்த்த திட்டமிடுகிறது. கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் … Read more

60 வயது அழகி… அர்ஜென்டினா-வின் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்…

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் 60 வயதான நபர் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான  என்ற அந்தப் பெண் பியூனஸ் அயர்ஸ் பிராந்தியத்தின் பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ளார். அழகு மற்றும் வயதுக்குமான கருத்துகளை மாற்றியமைத்துள்ள இவர் 2024 மே மாதம் நடைபெற இருக்கும் அர்ஜென்டினா நாட்டின் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள 18 முதல் 28 வயது உள்ளவர்களுக்கு … Read more

“அங்கிள் ஜி”.. கல்யாண வீட்டு மூலைகளில் அமர்ந்து புலம்புவார்.. குஜராத்தில் வறுத்தெடுத்த பிரியங்கா!

காந்திநகர்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, “கல்யாண வீடுகளில் ஒரு அங்கிள் ஜி இருப்பார்..” எனக் கூறி பிரதமர் மோடியின் பேச்சுகளை விமர்சித்துள்ளார். 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. Source Link

சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகி, இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பர்களில் ஒருவராக அவரது வலதுகரமாக கேசவா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகதீஷ் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட … Read more