தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அரசுப் பள்ளிகளுக்கு தடை

சென்னை தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்துள்ளது. சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒர்வர் மகா விஷ்ணுவின் பேச்சை கண்டித்ததற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மாநிலம் எங்கும் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அரசு … Read more

GOAT முதல்நாள் வசூல் 126 கோடியாம்.. நல்லா வடை சுடுறாங்கய்யா.. பங்கம் பண்ண ப்ளூ சட்டை மாறன்!

       சென்னை: விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது ட்வீட் போட்ட நிலையில், அந்த ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட அஜித், ரஜினிகாந்த் மற்றும் சூர்யா ரசிகர்கள் நல்லா வடை சுடுறாங்க என கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

`திமுக, அதிமுக இரண்டுமே முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!' – கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இருப்பினும், இதுவரை எவ்வளவு முதலீடுகள் தி.மு.க கொண்டுவந்திருக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க, தி.மு.க என இரண்டுமே பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும், அதற்கு தான் நடுவராக இருந்து செயல்படுவதாகவும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். ஸ்டாலின் – அமெரிக்கா … Read more

“தமிழக அரசுப் பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக கல்வித் தரம் தாழ்ந்துள்ளதாக சொல்வது சரியல்ல” – இபிஎஸ்

கோவில்பட்டி: “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக கல்வித்தரத்தை தரம் தாழ்ந்துள்ளதாக கூறுவது சரியல்ல. எந்தப் பள்ளியில் கல்வித்தரம் தாழ்ந்துள்ளது என்பதை குறிப்பிட்டுச் சொன்னால் அதனை அரசு சீர் செய்ய வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கல்லூரியில் சான்றிதழ் வாங்க சென்ற பெண்ணை 6 … Read more

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டி: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

புதுடெல்லி: ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மேலும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இத்தேர்தலில் போட்டியிட உள்ள 31 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா … Read more

பரபரப்பான சாலையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை : சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்

உஜ்ஜைன் பரபரப்பான சாலை நடைபாதையில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது சுற்றி நின்ற மக்கள் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளனர். பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வந்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி லோகேஷ் என்பவர், கடந்த 4ம் தேதி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், லோகேஷை கைது செய்தனர். காவல்துறையினர் லோகேஷிடம் நடத்திய விசாரணையில், … Read more

சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல் களம்.. 31 வேட்பாளர்களை அறிவித்த காங்., ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்

சண்டிகர் : ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 31 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. குறிப்பாக அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹரியானா மாநில சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் அம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு Source Link

மகள் என்று அழைத்த இயக்குநர்.. பல மாதமாக கற்பழித்தார்..18 வயதில் நடந்த கொடுமை.. நடிகை வேதனை!

சென்னை: கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவரை படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில், கொச்சியில் வைத்து காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, நடிகைகள் பாதுகாப்பு குறித்து ஒய்வு

மதுரை கலைஞர் நூலகம் மூலம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர்: அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை: மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்து தந்து மாணவர்களிடையே அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை தமுக்கம் மைதானத்திலுள்ள மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், பபாசி சார்பில் புத்தகத் திருவிழா தொடக்க விழா இன்று (செப்.06) மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமை வகித்தார். மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பபாசி தலைவர் … Read more