GOAT: `நீங்க போங்க; நான் பார்த்துக்குறேன்' – SK வின் பன்ச்; விஜய் – சிவா ஸ்பெஷல் மொமன்ட்ஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘GOAT’ படம் வெளியாகியிருக்கிறது. படத்தில் எக்கச்சக்கமான சர்ப்ரைஸ் கேமியோக்களை வைத்திருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று நடிகர் சிவகார்த்திகேயனின் கேமியோ. படத்தில் அவர் பேசியிருக்கும் வசனமும் ரசிகர்களின் அதிர்வலைகளைப் பெற்றிருக்கிறது. Vijay – SK ‘நீங்க இதைவிட எதோ முக்கியமான வேலையா போறீங்க. நீங்க அதை பார்த்துக்கோங்க. நான் இதை பார்த்துக்குறேன்!’ என முக்கியமான காட்சியில் விஜய்யிடம் சிவகார்த்திகேயன் கூறுகிறார். விஜய் அரசியலுக்கு செல்வதையும் இன்னும் ஒரு படத்தில்தான் நடிக்கப்போகிறார் என்பதையும் … Read more

விஜய் படத் தலைப்பில் சனாதனமா ? விசிக எம் பிக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்

சென்னை விசிக எம் பி ரவிக்குமார் விஜய் படத்தின் தி கோட் என்னும் தலைப்பில் சனாதனம் உள்ளதாக கூறியதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். இன்று நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது. இந்தப் படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். … Read more

\"பணத்தை அள்ளி கொடுத்த போலீஸ்..\" கொல்கத்தா மருத்துவர் கொலை.. பெற்றோர் அதிர வைக்கும் தகவல்! பகீர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 31 வயதான பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் மிக மோசமாகக் கையாண்டதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், போலீசார் தங்களுக்கு லஞ்சம் தர முயன்றதாகப் பரபர குற்றச்சாட்டுகளை மருத்துவரின் பெற்றோர் முன்வைத்துள்ளனர். மேற்கு வங்க Source Link

Tovino Thomas: டோவினோ தாமஸின் ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குநர் பிரசாந்த் நீல்!

 பெங்களூரூ: மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி படத்தின் மூலம் கேரளா மட்டும் இல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டோவினோ தாமஸ், தற்போது ‘ARM’ படத்தில் மணியன், குஞ்சிக்கெழு, அஜயன் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.  இந்த மூன்று கதாபாத்திரங்களின் பெயர்தான் படத்தின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. பான்-இந்தியா ஃபேன்டஸி படமாக உருவாகி உள்ள ARM படத்தை

தெலுங்கானா: போலீஸ் நடத்திய என்கவுண்ட்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பள்ளி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனப்பகுதியில் போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு, போலீசாரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவரும் அடங்குவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட … Read more

பாரா ஒலிம்பிக்; ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கள் வென்ற இந்தியா

பாரீஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் பாரா ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் தங்கம் , வெள்ளி என 2 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி முதலிடம் … Read more

சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி, 2 நாள் அரசு முறை பயணமாக புருனே சென்ற பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து நேற்று சிங்கப்பூருக்கு சென்றார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் விடுத்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். 2018-ம் ஆண்டுக்கு பிறகு 5-வது முறையாகவும், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாகவும் மோடி சிங்கப்பூர் சென்று இருக்கிறார். விமானம் மூலம் சிங்கப்பூர் லயன் நகர் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்த நாட்டின் … Read more

பரிஸ் பரா ஒலிம்பிக் போட்டியில் சமித்த துலான் கொடித்துவக்கு உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம்

2024 செப்டெம்பர் 2ம் திகதி ஆண்களுக்கான எப்44 ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்கள் புதிய உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்திய வீரர் சுமித் அன்டில் F64 பிரிவில் தங்கம் பதக்கம் வென்றதுடன் 70.59 மீட்டர் தூர சாதனையை பதிவு செய்தார். டோக்கியோ – 2020 பரா ஒலிம்பிக் போட்டியில் அவரால் நிகழ்த்திய … Read more

“சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்தது” – மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் உதயநிதி பேச்சு

வண்டலூர்: “மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகத்தின் கல்வி தான் சிறந்த கல்வி. தமிழகத்தின் பாடத்திட்டத்தை படித்த பலர் விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக உள்ளனர். சிலர் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், வயிற்று எரிச்சலில் உள்ளனர்.” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தின விழா இன்று (செப்.5) வண்டலூரில் உள்ள பி.எஸ். … Read more