வங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவு

இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் 19 முதல் பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி, அதன்பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய அணியில் யார் யார் இடம்பெற உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், ரிஷப் பந்த் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட … Read more

Vidamuyarchi: அஜித்தின் 'விடாமுயற்சி'… தீபாவளியா டிசம்பர் 20-ஆ? | சிங்கிள், பட ரிலீஸ் அப்டேட்!

அஜித்தின் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், அதன் ரிலீஸ் தேதி அறிவிப்பும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அல்லது டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வரும் என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் பரவுகிறது. மகிழ்திருமேனி, அஜித் அஜித்தின் திரைப் பயணத்தில் இந்த ஆண்டு, கொஞ்சம் ஸ்பெஷல் ஆண்டு. காரணம், கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்தது போல, இந்தாண்டில் அவர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘விடா … Read more

தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம்! அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு…

சென்னை: தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி (இந்திய … Read more

விலையில்லா சைக்கிளையும் விடாத அரசியல்.. ராஜஸ்தானில் காங்கிரசுக்கு பதிலடியாக பாஜக செய்ததை பாருங்க!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் 9 ம்வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளின் கருப்பு நிறத்தை காவி நிறமாக மாற்றம் செய்து ஆளும் பாஜக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி காவி என்பது வீரத்தின் அடையாளம், தேசபக்தர்கள் இந்த நிற உடையை அணிந்து தான் போராட்டம் நடத்தினர் என்று கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் Source Link

விஜய், அஜித், சூர்யா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்.. சூர்யா நேரில் அஞ்சலி

சென்னை: விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், சியான் விக்ரமின் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். பல வெற்றிப் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவுக்கும்

புனேவில் மொபைல் ஹாட்ஸ்பாட் பகிர மறுத்த நபர் குத்திக்கொலை

மும்பை, மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஹதப்சர் பகுதியில், நிதி நிறுவன ஏஜெண்ட் ராமசந்திர குல்கர்னி(47) என்ற நபரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் மொபைல் ஹாட்ஸ்பாட்டை பகிருமாறு கேட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களுக்கு ஹாட்ஸ்பாட்டை பகிர ராமசந்திர குல்கர்னி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின்போது அந்த இளைஞர்கள் ராமசந்திர குல்கர்னியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக … Read more

சுனிதா வில்லியம்ஸ் இருக்கும் ஸ்டார்லைனர் விண்கலனில் விசித்திரமான சப்தங்கள்.. நாசா விளக்கம்

நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கிறார்கள். விண்வெளியில் சுமார் 3 மாதங்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு திட்டங்கள் … Read more

இலங்கை 'ஏ' அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியின் கீழ் இலங்கை ‘ஏ’ அணிக்கும் தென்னாபிரிக்கா ‘ஏ’ அணிக்கும் இடையிலான இரண்டாவது போட்டியில், இலங்கை ‘ஏ’ அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி 30 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தென்னாபிரிக்க ‘ஏ’ அணியால் 41.1 ஓவர்களில் 239 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. … Read more

தமிழ்த் திரைத் துறையிலும் `ஹேமா கமிட்டி’ போல குழு அமைக்கப்படுமா? – வலுக்கும் கோரிக்கை

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரைப்படத்துறையில் பெண் திரைக்கலைஞர்கள், நடிகைகள் சந்தி(த்த)க்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியாகியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை மல்லுவுட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, கேரள திரையுலகிலுள்ள பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தால் கேரள திரைப்படத்துறையின் அம்மா சங்க தலைவர் மோகன்லால் தொடங்கி 15-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா … Read more

சென்னையில் அமைகிறது இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவுவதற்கும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் … Read more