கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வேதனை அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

சென்னை: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது … Read more

‘ஐ லவ் முகம்மது’ சர்ச்சை: உ.பி.யின் பரேலி வன்முறை தொடர்பாக மதகுரு, 7 பேர் கைது – பின்னணி என்ன?

பரேலி: ‘ஐ லவ் முகம்மது’ பிரச்சாரத்தை ஆதரித்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த உள்ளூர் மதகுருவும், இத்தேஹாத்-இ-மில்லாத் கவுன்சிலின் தலைவருமான தவுகீர் ராசா கான் மற்றும் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கான்​பூரில் உள்ள ராவத்​பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடை​பெற்​றது. இதையொட்டி அந்த கிராமத்​தில் ‘ஐ லவ் முகம்​மது’ என்ற வாசகத்​துடன் மின்சாரப் பலகை நிறு​வப்​பட்​டது. முதல் … Read more

மருத்துவமனையில் தாடி பாலாஜி.. என்ன ஆச்சு? தவெக விஜய்க்கு கடிதம்!

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.   

விஜய் கூட்டத்தில் 30 பேர் பலி… அதிகரிக்கும் உயிரிழப்புகள் – கரூர் செல்லும் ஸ்டாலின்

Karur Stampede Like Situation: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் மூச்சுத் திணறி 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூருக்கு நாளை முதல்வர் ஸ்டாலின் விரைகிறார். 

கரூர் : கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி… தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் அதிர்ச்சி…

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவரைக் காண கூடிய மக்கள் நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர்.

"பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தியாவிடம் கெஞ்சியது" – பாக். பிரதமருக்கு இந்தியா கொடுத்த பதிலடி!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது. இதில் மே 2025 மோதல் என இந்தியாவின் சிந்தூர் ஆபரேஷன் பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் காட்டிய தீவிர பங்களிப்பிற்கு எங்களின் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ட்ரம்ப் சரியான நேரத்தில் மற்றும் தீர்க்கமாக தலையிடாவிட்டால், ஒரு முழுமையான போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்” என்று பேசியிருந்தார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் … Read more

தமிழகத்தை ‘கடன்கார மாநிலம்’ ஆக படுகுழியில் தள்ளிய திமுக அரசு: தரவுகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் சாடல்

சென்னை: ‘திமுகவின் தோல்வி மாடல் அரசு ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தின் நிதி நிலைமையை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கடன் சுமையை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றிவிட்டு, இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டு, வெற்று விளம்பரங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றி … Read more

“லடாக் மக்களுக்கு பாஜக துரோகம்” – சோனம் வாங்சுக் கைதுக்கு கார்கே கண்டனம்

புதுடெல்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லடாக் மக்களுக்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “லடாக்கில் நிலைமையை அரசு மோசமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதையும் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. லடாக் மக்களின் விருப்பங்களுக்கு … Read more

பாகிஸ்தானில் இருப்பது 'கலப்பின மாடல்' ஆட்சி – பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புதல்

நியூயார்க்: பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்த கலப்பின மாடல் ஆட்சி இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க்கில் பிரிட்டிஷ் – அமெரிக்கன் பத்திரிகையாளர் மேஹ்தி ஹசனுக்கு, கவாஜா ஆசிப் பேட்டி அளித்தார். “பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்து நாட்டை வழிநடத்துகின்றன. ஒரு வகையில் இது ஒரு கலப்பின மாடல் என குறிப்பிடலாம்” என கவாஜா ஆசிப் ஏற்கனவே தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, மேஹ்தி ஹசன் கேள்வி எழுப்பினார். “பாகிஸ்தானில் … Read more