இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இதில் சில எரிமலைகள் அவ்வப்போது வெடித்து எரிமலை குழம்பை வெளியேற்றி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை இன்று வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையுடன், லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக செமேரு எரிமலை அருகே வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பால் ஜாவா தீவில் பதற்றமான சூழ்நிலை நிலவி … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

சென்னை: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டது தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் உள்​ளிட்ட 10 அதி​காரி​கள் விரை​வில் இடைநீக்​கம் செய்​யப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மாநில அரசின் தொழில்​நுட்ப பல்​கலைக்​கழக​மான அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் இணைப்பு அங்​கீ​காரம் பெற்று தமிழகத்​தில் 470-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. Source link

என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு

பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது புதிய கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டது. மஹுவா சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். அவர் உட்பட ஜன சக்தி ஜனதா தளத்தின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். இதுதொடர்பாக பாட்னாவில் உள்ள தேஜ் பிரதாப் யாதவின் வீட்டில் கட்சி தலைவர்கள் … Read more

ஜனாதிபதியின் விளக்க கேள்விகள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

புதுடெல்லி, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது. செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இன்று (வியாழக்கிழமை) … Read more

வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் தள்ளிவைப்பு

டாக்கா, வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டி தொடர் திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்து இருக்கும் வங்காளதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர், ‘இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து எதுவும் குறிப்பிடவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்தியா, … Read more

உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல் – 25 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 364வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் டெர்னோபில் நகரை … Read more

சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ‘பெரு​மழை அச்​சத்​தில் இருந்து சென்னை மக்​களைப் பாது​காக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தமிழக அரசு விரைந்து மேற்​கொள்ள வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலி​யுறுத்தி உள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சில ஆண்​டு​களாகவே நவம்​பர், டிசம்​பர் மாதம் வந்​தாலே சென்னை மாநகர வாசிகள் ஒவ்​வொரு நாளை​யும் அச்​சத்​துடன் கடக்க வேண்​டிய அவலநிலை ஏற்​பட்​டுள்​ளது. கோடை​யில் தண்​ணீர் பற்​றாக்​குறை​யும், மழைக்​காலத்​தில் வெள்​ள​மும் சென்​னை​யில் வழக்​க​மாகி​விட்​டது. Source link

பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு​ மகள் ரோஹிணி ஆச்​சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார். இதற்கு சகோ​தரன் தேஜஸ்​வி​யின் நெருங்​கிய நண்​பர்​கள் ரமீஸ் நிமத் மற்​றும் சஞ்​சய் யாதவ்​தான் காரணம் என்​றும் குற்​றம்சாட்டி உள்​ளார். ஆர்​ஜேடி.​யில் அந்​தளவுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ரமீஸ், சஞ்​சய் ஆகியோர் யார்? கடந்த 2 ஆண்​டு​களாக தேஜஸ்​வி​யின் அரசி​யல் குழு​வில் ரமீஸ் நிமத், சஞ்​சய் யாதவ் ஆகியோர் முக்​கிய​மானவர்​களாக உள்​ளனர். உ.பி. பல்​ராம்​பூரைச் சேர்ந்​தவர் ரமீஸ். இவரது … Read more

மாண்புமிகு பறை: “ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தேவா, … Read more

அசாமில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவு

திஸ்பூர், அசாமின் சோனித்பூர் பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.35 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.60 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.66 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி … Read more