ஜெர்மனி, டென்மார்க் பிரான்ஸ்: மீண்டும் வெளிநாடு பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். மேமாதம் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 3 நாடுகளுக்கு வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக  வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. இது நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் … Read more

ஆளுநருக்கு எதிராக நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்பவன் முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகஅரசின் நீட் உள்பட 13 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கும் ஆளுநருக்கு எதிராக நாளை  காங்கிரஸ் கட்சி சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்க மறுத்து வருவதுடன், அதை குடியரசு தலைவருக்கும் அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் சென்று … Read more

தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு! மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு  அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்படுவதாக, சட்டப்பேரவையில்  மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேர் தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், அங்கு குறைந்த … Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி…

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன், தீ விபத்து ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 2வது டவரில்  அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து நடந்ததாக முற்கட்ட தகவல் வெளியானது. ஆனால், இறுதியில் மின்கசிவு மூலம் தீ விபத்து நடைபெற்றதாகவும், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என அமைச்சர் தெரிவித்து உள்ளார். … Read more

தஞ்சை தேர் தீ விபத்து: முரண்பட்ட தகவல்கள் – அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்…

சென்னை: தஞ்சை தேர் தீ விபத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக  முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில், தீப்பிடித்த எரிந்தது தேர் அல்ல சப்பரம் என புது விளக்கம் அளித்துள்ளதுடன் அரசு அனுமதி பெறவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 94வருடமாக நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழா குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுடன், காவல்துறை தீயணைப்பு துறையினரின் மெத்தனத்தினாலே தீ … Read more

தஞ்சை தேர் விபத்து: திமுக அரசு மீது குற்றச்சாட்டு – அதிமுக தர்ணா – வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு…

சென்னை:  தஞ்சை தேர் விபத்து தொடர்பாக பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் பேச அனுமதி கேட்ட நிலையில், அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால், பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து,  அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமம் அப்பர் கோயில் சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது மின் கம்பத்தில் … Read more

திருப்பதி கோவிலுக்கு தங்க நகை தயாரிக்கும் நிறுவனத்தில் இஸ்லாமியர் இடம்பெற்றதால் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தேவஸ்தானம்…

திருமலை: திருப்பதி கோவிலுக்கு தங்க நகை தயாரிக்கும் நிறுவனத்தில் இஸ்லாமியர் இடம்பெற்றதால், அந்த நிறவனத்தின் ஒப்பந்தத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான்ம் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் விதிகளின்படி, கோவில் பணி மற்றும் சில முக்கிய பணிகளில் பணியாற்றுபவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால் கடந்த காலங்களில், சில மாற்றுமதத்தினரும், திருப்பதி கோவில் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில்,பின்னர் அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர். இது … Read more

27/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கியது….

டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கி  உள்ளது. நேற்று ஒரே நாளில் 2927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 பேர் உயிரிந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டு உள்ளது. அதனப்டி, நேற்று ஒரே நாளல் புதிதாக மேலும்  2,927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,65,496 ஆக … Read more

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த … Read more

கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி! பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், அறுபது ஆண்டு தேர்தல் களத்தில் வீழ்த்த முடியாத அரசியல் அதிசயம் என கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர்  மறைந்த கலைஞர் கருணாநிதியின்  பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என … Read more