மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் – ஒருவர் பலி

மத்திய உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின. இதில் மருத்துவமனை கட்டிடம் தீப்பற்றியதோடு, சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இடுபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்குள் சிக்கிய 15க்கும் மேற்பட்டோரை ரத்தக் காயங்களுடன் மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி, ரஷ்ய படைகள், மீண்டும் தாங்கள் மனிதாபிமானம் அற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக சாடியுள்ளார். … Read more

நீர்தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு ஊழியர்..!

நீர்தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க, பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு ஊழியரின் விநோத செயல் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், கொயாலிபேடா பகுதியில் உணவுப்பொருள் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் விஷ்வாஸ் என்பவர், தனது நண்பர்களுடன் கெர்கட்டா பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அவரது செல்போன் தவறி 15 அடி ஆழ நீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. செல்போனை மீட்க நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை … Read more

முதலீட்டாளர்களை தமிழகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜப்பானிய முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒசாகா நகரில் ஜெட்ரோ எனப்படும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்றார். சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர், இந்தியாவும் ஜப்பானும் ஆசியாவின் இரண்டு பெரிய மற்றும் பழம்பெரும் ஜனநாயக நாடுகள் என்று குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் சமீப காலங்களில் … Read more

ஹோட்டல் அதிபர் துண்டு, துண்டாக வெட்டிக்கொலை.. கேரள கொலையாளிகள் சென்னையில் கைது..!

கேரளாவில் ஹோட்டல் அதிபரை துண்டு, துண்டாக வெட்டி, சூட்கேஸ் மற்றும் பையில் அடைத்து பள்ளதாக்கில் வீசிய வழக்கில் அண்ணன், தங்கை, காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமிற்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காதல் ஜோடியை போலீசார் மடக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு… கேரளாவை மீண்டும் உலுக்கியுள்ள கொடூர கொலை சம்பவத்தில்.., கண்டந்துண்டமாக வெட்டி சூட்கேஸ் மற்றும் பையில் வைத்து, பள்ளத்தாக்கில் வீசப்பட்ட ஹோட்டல் அதிபர் சித்திக் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீடு உட்பட 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு உட்பட கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்… கரூர் ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். உடனே வீட்டின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குமார் என்பவரை பெண் அதிகாரி ஒருவர் தாக்கியதாகவும், அதில் மயங்கி விழுந்த குமார் … Read more

22 வயதில் சிறையில் தள்ளப்பட்டவர் 55 ஆவது வயதில் “குற்றமற்றவர்” என விடுதலை.. 27 ஆண்டுகளுக்கு பிறகு மற்றொருவர் அளித்த வாக்குமூலத்தால் திருப்பம்..!

அமெரிக்காவில் கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த நபரை 33 ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 1990 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கட்டிட தொழிலாளியான டேனியல் சல்டானா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது 22 வயதான டேனியலுக்கு 45 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கின் குற்றவாளி ஒருவர், பரோல் கோரி விண்ணப்பித்த போது, அந்த சம்பவம் … Read more

திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம்..!

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. 65 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். முக்கோண வடிவில் 4 தளங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் உட்புற அமைப்பு, தாமரை, மயில் மற்றும் ஆலமரம் உள்ளிட்ட தேசிய சின்னங்களை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஞானம், சக்தி, கர்மா ஆகிய மூன்று வாயில்களை கொண்ட நாடாளுமன்ற கட்டடத்தில், இரு அவைகள் மட்டுமின்றி எம்பிக்களுக்கான … Read more

250 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. 2,500 பேர் வெளியேற்றம்.. போலந்தில் பதற்றம்..!

இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலந்தின் ரோக்ஸ்வா நகரிலிருந்து இரண்டாயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர். அங்குள்ள ரயில்வே பாலம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது ஜெர்மன் விமானப்படையால் வீசப்பட்ட இந்த 250 கிலோ குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுனர்கள் அதனை செயலிழக்கச் செய்ய வேறொரு பகுதிக்கு எடுத்து சென்றனர். முன்னதாக அப்பகுதியில் வசித்த 2,500 பேர் பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். Source link

ககன்யான் திட்டம்.. இஸ்ரோவுடன் இணைந்து செயலாற்றும் இந்திய கடற்படை..!

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களுக்கான மீட்பு காப்சூலை, மீட்பு குழுக்களின் பயிற்சிக்காக இந்திய கடற்படையிடம், இஸ்ரோ ஒப்படைத்தது. ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. கொச்சியில் உள்ள கடற்படை பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி முதல் வீரர்கள் பயணிக்கும் காப்சூலை மீட்பது குறித்த பயிற்சியை இஸ்ரோ தொடங்கியது. இந்நிலையில், மீட்பு பயிற்சியில் இஸ்ரோவுடன் இணைந்து இந்திய கடற்படையும் செயலாற்றவுள்ளது. இதுகுறித்த பயிற்சி திட்ட ஆவணத்தை கடந்த 24-ம் தேதி, … Read more

கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோர்.. “24 ஹவர்ஸ் கிடைக்கும்” ஆதாரமாக சிக்கிய காட்சிகள்!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று வருவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது…. கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ள கல்வராயன் மலையில்,நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூகவிரோதிகள் சிலர் பேரல் பேரல்களாக கள்ளச்சாராயம் காய்ச்சி அவற்றை மலையடிவாரத்திலுள்ள … Read more