மற்றுமொரு இராணுவ ஜெனரலுக்கு முக்கிய பதவி!

 அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றினார். விமலவீர திஸாநாயக்க இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித … Read more

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக 31 நாடுகள்! – அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “இலங்கை அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் அரசாங்கமாகும். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 45 அங்கத்துவ நாடுகளில் 31 நாடுகள் இலங்கை … Read more

மைத்திரி முன்வைத்த கோரிக்கை! – மகிந்த, கோட்டாபய இணக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரதான பிரேரணைக்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் மீதான அழுத்தத்தைத் தணிக்க சில நிவாரணத் திட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் மாநாட்டைக் கூட்டுவதே எங்கள் முக்கிய முன்மொழிவாக … Read more

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பசில்! – திஸ்ஸகுட்டியாராச்சி வெளியிட்ட தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (08) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி, அனைத்து தரப்பினரையும் பாதுகாத்து அரசாங்கம் முன்னோக்கி செல்ல வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்ததாக கூறினார். “இன்று நாங்கள் அனைவரும் கைகளை உயர்த்தி, எந்த அமைச்சரை நீக்கினாலும், எந்த அரசியல் முடிவு எடுத்தாலும் பின்வரிசை உறுப்பினர்களாக அவருடன் இருப்போம் என்று உறுதியளித்தோம்.” “அசிங்கமான … Read more

ரஷ்ய அதிபரின் உடல்மொழி (Body Language) வெளிப்படுத்தும் செய்தி!! அடுத்து என்ன?

உக்ரைன் – ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ரஷ்ய அதிபர் அணு ஆயுதங்கள் பற்றிக் கோபத்துடன் பேசிய காட்சியில் ரஷ்ய அதிபரின் உடல் மொழியை ஆராய்ந்தார்கள் உடல் மொழி வல்லுனர்கள். அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பொழுது, உக்ரைனில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எதிர்த்தாக்குதல்கள், ரஷ்யாவுக்கு எதிரான மேற்குலகின் எழுச்சி போன்ற எதிர்வினைகளால் ரஷ்ய அதிபருக்கு ஏற்பட்டுள்ள ‘விரக்தியை’ அவரது உடல் மொழி வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கின்றார்கள் உடல் மொழி வல்லுனர்கள். இந்த விடயங்களையும், உக்ரேனில் தற்பொழுது இடம்பெற்றுவருகின்ற … Read more

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி குறைப்பு! மத்திய வங்கி தீர்மானம் – செய்திப் பார்வை

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியை 230 ரூபா வரை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின்போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,     Source link

தாய்மாரே! மனைவிகளே! தோழிகளே! – ரஷ்ய படையினரின் பெண் உறவுகளுக்கு புடினின் செய்தி

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்மார்கள், மனைவிகள், மற்றும் நண்பிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக அனுப்பப்பட்ட துருப்புக்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும் என்று புடின் கூறியுள்ளார். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இந்த காணொளி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில், புடின் “எங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள் மற்றும் தோழிகள்” என்று படையினர் தொடர்புடைய பெண்களை விளித்துள்ளார். “உங்கள் அன்புக்குரியவர்களுக்காக … Read more

பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

இலங்கை டொலருக்கு நிகரான ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 302.92 ரூபாவை எட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 294.06 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கையில் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட மிக அதிகபட்ச கட்டணம் இதுவென்பது … Read more

ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகை! அமைச்சரவை அனுமதி – செய்திகளின் தொகுப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு 38 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புத்தாண்டின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த சலுகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,  Source link

சுனாமி பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட தென்னிலங்கை சிறுமியின் இன்றைய பரிதாப நிலை(Photo)

சர்வதேச பெண்கள் தினமான இன்று தென்னிலங்கையில் சுனாமி பேரலையில் சிக்கிய ஐந்து வயது சிறுமி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தங்காலையில் சுனாமியில் சிக்கிய 5 வயதுடைய சிறுமி 18 வருடங்களின் பின்னர் 2 பிள்ளைகள் உள்ள நிலையில் மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வயது, உரிய பெயர், பிறப்பு சான்றிதழ் எதுவும் இல்லாமல் வாழும் இந்த பெண் கடுமையான வறுமையில் சிக்கித் தவிப்பதாக தெரியவந்துள்ளது. சரியான வயது தெரியாத கே.ஏ.கமலா பெரேரா … Read more