புத்தாண்டில் நிம்மதி அளிக்கும் செய்தி! LPG விலை குறைய வாய்ப்பு!

LPG சிலிண்டர் விலை: புத்தாண்டில் உங்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்படலாம். புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டில் சமையல் எரிவாயு (LPG) விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைப்பதன் மூலம் அரசு எண்ணெய் நிறுவனங்கள் நுகர்வோருக்கு அளிக்கும் பலன். கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்கள் … Read more

லத்தி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு, ரமணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்களின் வெளியாகி உள்ளது.  லத்தி படம் உருவாகும் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டது அனைவராலும் பரவலாக பேசப்பட்டது.  மேலும் படத்தில் உள்ள சண்டை காட்சிகள் பெரிதாக பேசப்படும் என்று செய்திகள் வெளியானது.  சென்னை நீலாங்கரையில் கான்ஸ்டெபிலாக இருக்கும் விஷால் மனைவி சுனைனா மற்றும் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.  குற்றவாளியை அடித்ததற்காக சஸ்பெனில் இருக்கும் விஷால் … Read more

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு – செல்லூர் ராஜு விமர்சனம்

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல, ஒரு இழிவான பிறவி. எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தெய்வமாக வாழ்ந்தவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளுக்கு உரிய குணமாகும்.  காவி துண்டை எங்கு போட வேண்டுமோ … Read more

‘வா பதிலடிதான் தெரியுமடா உனக்கு சம்பவம் இருக்கு’ – வெளியானது துணிவு பாடல் லிரிக்ஸ்

ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இருவரும் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக முழு வரவேற்பை பெறவில்லைஇதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் … Read more

சூப் கடையை சூறையாடிய தந்தை, மகன்; கர்ப்பிணி காயம் – போலீஸ் வலைவீச்சு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சிவா மற்றும் சித்ராதேவி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே சூப் மற்றும் ஹோட்டல் நடத்திவரும் இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சித்ரா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக முத்தனம்பட்டியை  சேர்ந்த வைரமுருகன் என்பவரிடம் சிவா விலைக்கு கோழி கேட்டிருந்த நிலையில் சிவா இல்லாத நேரம் கடைக்கு … Read more

பில்லா படத்தில் கவர்ச்சிக்கு என்ன காரணம்?… நயன் ஓபன் டாக்

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களையும், தனிப்பட்ட விமர்சனத்தையும் சந்தித்தவர் அவர். இருந்தாலும் மனம் தளராத அவர் தொடர் உழைப்பின் காரணமாக தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன். அந்தவகையில், அஷ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ், வினய் உள்ளிட்டோரும் இந்தப் … Read more

சாகித்ய அகாடமி விருது – காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் ராஜேந்திரன் பெறுகிறார்

தமிழ், மலையாளம், கன்னடம் உள்பட 24 மொழிகளில் எழுதப்படும் சிறந்த இலக்கியம் சார்ந்த நாவல்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தமிழகத்தில் காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னர் தமது எழுத்துப் பணிக்காக டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட … Read more

எச்சரிக்கை – மாஸ்க் போடுங்க… சுற்றுலா போகாதீங்க… மீண்டும் மிரட்டும் கொரோனா

IMA Issues New Covid Advisory: சீனாவில் ஒமிக்ரான் BF.7 மற்றும் BF.12 கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதே தொற்றுவகை பரவல் காணப்பட்டுள்ளது. அந்த வகையில், உயர்மட்ட மருத்துவர்கள் அமைப்பான இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ), கொரானா தடுப்பு நடவடிக்கையை உடனடியாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வேகமாக பரவக்கூடிய தொற்றின் எண்ணிக்கையை அடுத்து, பொது ஆலோசனையையும் ஐஎம்ஏ வெளியிட்டது. அதில், வரவிருக்கும் கொரானா அலையை சமாளிக்க தேவையான … Read more

துணிவுடன் மோத கொஞ்சம் சிந்திக்கணும் – மதுரையில் முற்றும் மோதல்

வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குனர் ஹெச் வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படக்குழுவினரின் ஏற்கனவே வெளியிட்ட இந்த அறிவிப்பை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் அண்மையில் துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் மதுரையில் விஜய் அஜித் ரசிகர்கள் இடையே போஸ்டர் மோதல் அதிகரித்து வருகிறது. … Read more

நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழாவிற்கு 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி நிறைவு!

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி செய்ய 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்தது. நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2 டன் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாத மூல நட்சத்திரம் அமாவாசை தினத்தில், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் நாளை நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி, சுவாமிக்கு 1,00,008 வடைகள் தயார் செய்யும் பணி கடந்த மூன்று … Read more