கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்| A bride who called off the marriage by asking for additional dowry
ஹைதராபாத் :தெலுங்கானாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு, திருமணத்தை மணமகள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் ஹைதராபாத் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், அஸ்வராபேட்டையைச் சேர்ந்த பெண்ணிற்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இவர்கள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டார் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. பழங்குடியின வழக்கத்தின்படி, தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு, மணமகன் வீட்டார் வரதட்சணை அளிப்பர். இதன்படி மணமகளுக்கு, மணமகன் வீட்டார், 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக அளித்தனர். … Read more