ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது

சென்னை: சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகரில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற அசோக் என்பவர் கைது செய்யப்பட்டார். உணவு விநியோக நிறுவன ஊழியரான அவர், மதுபோதையில் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

குரூப்-4 தேர்வு விவகாரம்.. டிஎன்பிஎஸ்சி இன்று அவசர ஆலோசனை..

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், குரூப் – 4 தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

"வெற்றிக்கு கைகொடுத்த மூவர்" – எடப்பாடி சாதித்த பின்னணி

அ.தி.மு.க-வின் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடுத்திருந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கவும் மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக முறைப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொறுப்பை ஏற்றதும், முதல் உத்தரவாக வரும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். பொதுச் செயலாளராக அவர் தேர்வானதைக் கொண்டாடும் வகையில், அ.தி.மு.க தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. “இந்தக் கொண்டாட்டங்கள் … Read more

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான கால நீட்டிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மொழிப்பாடத்துடன் துவங்கும் பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை … Read more

நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது 100வது கோலை அடித்து சாதனை

அர்ஜென்டினா: நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். குராகாவ் அணிக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் 100வது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை புரிந்துள்ளார்.

Tamil News today live: பன்னீர் தரப்பு மேல்முறையீடு… எடப்பாடி தரப்பில் கேவியட் மனு!

பன்னீர் தரப்பு மேல்முறையீடு… எடப்பாடி தரப்பில் கேவியட் மனு! அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கினார். அப்போது அவர் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியதோடு, பன்னீர் தரப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனை … Read more

ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

சென்னை: ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அம்வரில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்க மேண்டுமென அதிமுக சார்பில் கேவியட் … Read more

புத்த மதத்தில் உயர் பொறுப்புக்கான பட்டம் பெற்ற 8 வயது சிறுவன்

தர்மசாலா : புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக கருதப்படும் ‘கல்கா ஜெட்சன்’ பொறுப்பு மங்கோலிய நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தர்மசாலாவில் கோலாகலமாக நடந்த இந்த நிகழ்வில் 5000 புத்த பிட்சுகள் பங்கேற்றனர்; தலாய்லாமா, அந்த சிறுவனுக்கு பட்டம் சூட்டி அறிமுகம் செய்தார்; வளரும் வரை சிறுவன் பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என கூறப்படுகிறது; 2012ம் ஆண்டு முதல் அப்பொறுப்பு காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹால்மார்க் குறியீட்டு எண் காலக்கெடு நீட்டிப்பு இல்லை| No Hallmark index term extension

புதுடில்லி : தங்கத்திலான நகைகள் மற்றும் பொருட்களுக்கு ஏப்ரல் தேதியில் இருந்து பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய கழகத்தின் 6 இலக்க ஹால் மார்க் குறியீட்டு எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.ஐ., தலைவர் பிரமோத் குமார் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏப்ரல் தேதியில் இருந்து, ஹால்மார்க்கின் 6 இலக்கக் குறியீடு இன்றி தங்க நகைகள் மற்றும் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

ஈரோடு: துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட ஆண் சடலம்! – பகீர் சம்பவம்

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை அடுத்த செரையாம்பாளையம், பவானி ஆற்றில் கை, கால், தலை இல்லாத முண்டமாக ஒரு ஆணின் சடலம் மிதப்பதாக கவுந்தப்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார், கை, கால்கள், தலை இல்லாமல் நிர்வாண நிலையில் காெடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த உடலை கைப்பற்றி விசாரணையை தாெடங்கினர். கொலை செய்யப்பட்ட உடலின் மற்ற பாகங்கள் கிடைக்கிறதா என்பதையும் போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். செரையாம்பாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ.க்கு அப்பால் குட்டிபாளையம் … Read more