“மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின்வெட்டு!" – சட்டசபையில் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது, “தமிழகத்தில் பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது. கோடைக்காலத்தில் மின்சார தேவை அதிகரித்துள்ளதுள்ளதால், தமிழக அரசு நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கையிருப்பு வைத்திருக்கவில்லை. மின் வெட்டு காரணமாக விவசாயிகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர், மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் … Read more

உக்ரைனில் விழுந்து நொறுங்கிய விமானம்… உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக ராணுவம் தகவல்

  உக்ரைனில் ராணுவ போக்குவரத்து விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தென்கிழக்கில் உள்ள Zaporizhzhia நகரிலே இந்த விபத்து நடந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை Zaporizhzhia பிராந்திய ராணுவ நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. Zaporizhzhia பிராந்திய ராணுவ நிர்வாகம் அளித்த தகவலில், இன்று காலை Antonov AN-26 விமானம் Zaporizhzhia-வில் உள்ள Vilniansk மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. எப்படி இருந்த பூமி.. இப்படி அழிகிறது! அதிர வைத்த கூகுள் டூடுள் படங்கள்  விமானம் சோதனை ஓட்டத்தின் … Read more

மோடிஅரசு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனம் – சசிகலாவிடம் காவல்துறை விசாரணை குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

மோடிஅரசு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியின் விமர்சனம்  மற்றும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் காவல்துறை நடத்தும் விசாரணை குறித்தும் கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-cartoon-Audio-2022-04-22-at-1.20.49-PM.ogg

தமிழகம் முழுவதும் வரும் மே.8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்- மா.சுப்பிரமணியன்

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தில் இருந்து இங்கே பணியாற்ற வந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. எத்தனை பேர் வந்துள்ளனர் என்கிற விவரத்தை கட்டுமான நிறுவனங்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனை சார்பில் உடனடியாக ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும். அங்கிருந்து வருபவர்கள் மூலம் தொற்று பரவக் கூடாது … Read more

தமிழ்நாட்டுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

வெவ்வேறு கட்சியில் சேருவதே பிரசாந்த் கிஷோரின் தொழில்: பா.ஜ., எம்.பி தாக்கு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் வெவ்வேறு கட்சியில் உறுப்பினராக இருப்பதாகவும், அதுவே அவரது தொழில் எனவும் பா.ஜ., எம்.பி திலீப் கோஷ் விமர்சித்துள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால், கட்சியை பலப்படுத்தும் விதமாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்., கட்சியில் சேரப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக … Read more

கரைசேருமா காங்கிரஸ்…!பிரசாந்த் கிஷோரின் கட்சியின் "மறுபிறவி" திட்டம் என்ன- முழுவிவரம்

புது டெல்லி: பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் … Read more

2050ல் இந்தியா எப்படி இருக்கும் தெரியுமா..? கௌதம் அதானி செம கணிப்பு..!

இந்திய பொருளாதாரம் பல காரணிகளால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், எப்போது விலைவாசி குறைந்து நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்குத் திரும்பும் என்பது அனைத்து தரப்பினரின் முக்கியக் கேள்வியாக உள்ளது. சீரிஸ் 5: பங்கு ஒதுக்கீடு என்றால் என்ன.. சிறு முதலீட்டாளர்கள் எப்படி வாய்ப்பை அதிகப்படுத்தலாம்! இந்நிலையில் 2050ல் இந்தியா எப்படி இருக்கும் என்பது பற்றிக் கௌதம் அதானி சிறப்பான கணிப்பை வெளியிட்டுள்ளார். கௌதம் அதானி இந்திய நிறுவனங்களும், வர்த்தகமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், … Read more

“பிரசாந்த் கிஷோர் அனைத்து கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பார்!" – பாஜக எம்.பி தாக்கு

தேர்தல் வியூக வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு, 2024 தேர்தல் வியூகம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை, சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட குழு ஒரு வாரத்துக்குள் ஆய்வு செய்து, கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கும் என்று காங்கிரஸ் வெளிப்படையாகவே கூறியிருந்தது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைந்துவிட்டதாக பாஜக உள்ளிட்டக் கட்சிகள் கூறிவந்தன. பிரசாந்த் கிஷோர் இந்த நிலையில், வெவ்வேறு … Read more

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: வெற்றி யாருக்கு? வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சமீபத்திய கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகள் இமானுவல் மேக்ரானுக்கு ஆதரவாக இருக்கும் என்று கூறியுள்ளன. நேற்று முன்தினம் மற்றும் நேற்று (ஏப்ரல் 20, 21) நடத்தப்பட்ட அந்த கருத்துக்கணிப்பில், மேக்ரான் 56 சதவிகித வாக்குகள் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பிரான்ஸ் வாக்காளர்களில் 72 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இறுதி முடிவுகள் எப்படி இருக்குமோ … Read more