டெல்லி ஆம்-ஆத்மி அரசில் 2 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

புதுடெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசில் அடிசி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கல்வி, சுகாதாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கலால்துறை முறைகேடு வழக்கிலும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்கள். இதனால் டெல்லி ஆம்ஆத்மி … Read more

நீட்டா அம்பானி தொடங்கிய பெண்கள் முன்னேற்றத்துக்கான வலைதளம் – 31 கோடி பயனாளரை சென்றடைந்து சாதனை

மும்பை: பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் வலைதளமான ‘ஹெர் சர்க்கிள்’ (hercircle.in) 31 கோடி பெண்களை சென்றடைந்துள்ளதாக நீட்டா அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிறுவனரும், தலைவருமான நீட்டா அம்பானி கடந்த 2021-ம் ஆண்டு ஹெர் சர்க்கிள் என்ற டிஜிட்டல் வலைதளத்தை பெண்களுக்காக பிரத்யேகமாக தொடங்கி வைத்தார். இதுகுறித்து நீட்டா அம்பானி கூறியது: பெண்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் மற்றும் மேம்பாடு சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் டிஜிட்டல் தளமாக ஹெர் சர்க்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம், கல்வி, தொழில்முனைவு, … Read more

பஞ்சாப் பொற்கோயிலில் ஜனாதிபதி முர்மு தரிசனம்

அமிர்தசரஸ்: ஜனாதிபதி திரவுபதி முர்மு  ஒரு நாள் பயணமாக நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு வந்தார். அங்குள்ள பொற்கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சென்று தரிசனம் செய்தார்.அவருடன் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி  ஆகியோர் சென்றிருந்தனர். கோயிலின் தகவல் மையத்துக்கு சென்ற ஜனாதிபதியை கவுரப்படுத்தும் வகையில் அவருக்கு அங்கி,  சீக்கிய மத நூல்கள், பொற்கோயிலின் மாதிரி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

ஹோலி கொண்டாட்டம் –  டெல்லியில் ஒரே நாளில் ரூ.60 கோடிக்கு மது விற்பனை

புதுடெல்லி: டெல்லியில் ஹோலி பண்டிகை இந்த வருடம் அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் தாக்கம் மது விற்பனையில் தெரியவந்துள்ளது. இங்கு மார்ச் 6-ல் மட்டும் ரூ.60 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மொத்தம் சுமார் 26 லட்சம் மது பாட்டில்கள் டெல்லிவாசிகளால் வாங்கப்பட்டுள்ளது. இது டெல்லியில் ஹோலிக்கான மது விற்பனையில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. டெல்லியில் கடந்த பிப்ரவரியில் ரூ.238 கோடிக்கு மது விற்பனையானது. மார்ச்சில் இதை முறியடிக்கும் வகையில் ஹோலிக்கு முன் ஒரே நாளில் ரூ.60 கோடிக்கு … Read more

இந்திய கடற்படையின் கூட்டு போர் பயிற்சி நிறைவு

புதுடெல்லி: இந்திய கடற்படையின் பிரம்மாண்ட கூட்டு போர் பயிற்சியான டிரோபெக்ஸ் 2023 அரபிக்கடலில் நேற்று நிறைவடைந்தது.  2023ம் ஆண்டுக்கான டிரோபெக்ஸ் கூட்டு போர் பயிற்சி 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று அரபிக்கடல் பகுதியில் நிறைவுபெற்றது. இதுகுறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியதாவது, “இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, கடலோர காவல்படை உள்ளிட்டவை இணைந்து பங்கேற்ற இந்த பயிற்சியில், கடலோர பாதுகாப்பு பயிற்சி. … Read more

இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஹதப்சார் என்ற பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 6 ) மாலை 5 மணி அளவில் அயன் ஷேக், சையத் ஜாவித் ஷேக் என்ற இளைஞர்கள் சாலையில் பைக் ஓட்டி சாகச செயல்களில் ஈடுபட்டனர். மேலும், இந்த பைக் சாகசங்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக அவர்கள் எடுத்து வந்துள்ளனர். மக்கள் வந்து செல்லும் என்ற சாலை என்று எண்ணாமல் அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசத்தில் அவர்கள் ஈடுபட்ட நிலையில், அந்த … Read more

தமிழகத்தில் நான்கு மிதக்கும் கப்பல் தளம்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி:  தமிழ்நாட்டில்  கூடுதலாக நான்கு மிதக்கும் கப்பல் தளத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.  ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைப்பதற்குப் பதிலாக மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும் … Read more

மக்களவையில் மைக் அணைக்கப்படுவதாக புகார்லண்டன் பேச்சுக்காக ராகுலை விமர்சித்த துணை ஜனாதிபதி: மரபுப்படி நான் மவுனமாக இருக்க முடியாது என ஆவேசம்

புதுடெல்லி,மார்ச் 10: மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது மைக் அடிக்கடி அணைக்கப்படுவதாக லண்டனில் குறிப்பிட்ட ராகுல்காந்தியை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சனம் செய்தார்.  காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங் தொடர்பான புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெகதீப் தன்கர் பேசியதாவது:   நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நம்மில் சிலர்,  ஜனநாயகத்தை நியாயமற்ற முறையில் இழிவுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். எங்களை இழிவுபடுத்துவதாக நினைத்து, நமது நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்பையும் களங்கப்படுத்துகிறார்கள். இதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இந்த … Read more

இன்ஸ்டாவில் புது சாதனை: அல்லு அர்ஜுனுக்கு 20 மில்லியன் பாலோயர்கள்

ஐதராபாத்: இன்ஸ்டகிராமில் புதிய சாதனை படைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா படம் மூலம் பான் இந்தியன் ஸ்டாராக மாறிப்போனார் அல்லு அர்ஜுன். அவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்த மேனரிசங்கள், உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிலையில், இப்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டகிராமில் 20 மில்லியன் பாலோயர்களை பெற்று, இத்தனை பின்தொடர்பவர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். … Read more

நடிகர், இயக்குனர் சதீஷ் கவுஷிக் மரணம்

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கவுஷிக் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சதீஷ் கவுஷிக், டெல்லியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருந்தபோது, நேற்று அதிகாலையில் உடல் நலம் பாதித்தது. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 67. இந்த தகவலை அவரது நெருங்கிய நண்பரான நடிகர் அனுபம் கெர் தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் இயக்கி … Read more