திறன்மிகு இளைஞர்களால் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை

அகமதாபாத்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் குஜராத் அரசு ஏற்பாடு செய்திருந்த “ரோஜ்கார் மேளா” என்ற வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. பல துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு திறன்மிகு பணியாளர்களை அதிக எண்ணிக் கையில் உருவாக்க வேண்டியது தற்போது அவசியமாகி உள்ளது. நமது … Read more

மேகாலயா முதலமைச்சரமாக கான்ராட் சங்மா பதவியேற்பு

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 அமைச்சர்களுக்கு கவர்னர் பாகுசவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தேசிய மக்கள் கட்சியைச் … Read more

லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய நீதிமன்றம் உத்தரவு..!!

பெங்களூரு: லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. விருபாக்சப்பாவுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம், போலீசில் சரணடைய உத்தரவிட்டுள்ளது. பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா, கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரின் மகன் பிரசாந்த் மதல் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்காளராக பணியாற்றி … Read more

பிரதமர் மோடியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியா வசம் வந்துவிடும் – ஹரியாணா அமைச்சர் பேச்சு

சண்டிகர்: பிரதமர் மோடியால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) இந்தியா வசம் வந்துவிடும் என்று ஹரியாணா மாநில அமைச்சர் கமல் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹரியாணா மாநிலம் ரோஹ்டாக் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதற்கான குரல்கள் அங்கு ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பிரதமர் மோடியின் நல்லாட்சி காரணமாக அடுத்த இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் … Read more

ரயில் டிக்கெட்டுடன், இனி இந்த விஷயமும் இலவசமாகக் கிடைக்கும்

இந்திய இரயில்வே: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் மலிவானது. அதே நேரத்தில், இந்திய ரயில்வேயால் நீண்ட தூரப் பயணங்களையும் எளிதாக முடிக்க முடியும். அதே நேரத்தில், ரயில்வே மூலம் பல முக்கிய வசதிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றைப் பற்றி மக்களுக்குத் தெரியாது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்… இந்த வசதி கிடைக்கும் ரயில் பயணத்திற்கான ரயில் டிக்கெட் எடுத்து ரயில் நிலையத்தை … Read more

5 பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட 85 வயது முதியவர்: ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு வழங்க முடிவு..!!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட 85 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு வழங்குவதாக எடுத்துள்ள முடிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாதூர் சிங். இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் இருக்கின்றனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் சகரான் பூரில் வசித்து கொண்டு பள்ளி ஆசிரியராக வேலை பார்க்கிறார்.   மேலும், நாதூர் சிங்கிற்கு ஒன்றரை கோடி ரூபாய் … Read more

கர்நாடக தேர்தலில் ஒவைசி கட்சி போட்டி – முஸ்லிம் வாக்குகள் சிதற வாய்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி தங்களது கட்சி, கர்நாடக பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத் தேர்தலில் … Read more

மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்..!

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை ஏர்டெல் தொடங்கியது. இந்நிலையில் நேற்று புதிதாக 125 நகரங்களுக்கு 5ஜி சேவையை அந்நிறுவனம் விரிவாக்கம் செய்தது. இதன்மூலம் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களின் மொத்த எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து நகரங்கள் மற்றும் முக்கிய கிராமங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு விடும் என்றும் … Read more

லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. சரணடைய உத்தரவு

டெல்லி: லஞ்ச வழக்கில் தேடப்பட்டு வரும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருபக்சப்பா 48 மணி நேரத்தில் சரணடைய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பா.ஜ.க. விருபாக்சப்பாவுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிமன்றம், போலீசில் சரணடைய உத்தரவு பிறப்பித்துள்ளது.

டோல்கேட் கட்டணம் உயர்வு .. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது..?

இந்தியாவின் தேசிய நெடுஞசாலைகள் எல்லாமே மத்திய அரசின், நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அந்த அமைச்சகமே நெடுஞசாலைகள் ஆணையங்கள் மூலமாக தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டு , நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சேவை கட்டணங்களை அவ்வப்போது தேசிய நெடுஞசாலை ஆணையம் உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் தற்போதைய கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் உயர்த்தப் போவதாகவும். இது குறித்த ஆவணங்கள்மார்ச் 25-ம் தேதி மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கக … Read more