ரூ.21,000 கோடி ஹெராயின் சிக்கிய அதானி துறைமுக வழக்கில் 2வது துணை குற்றப்பத்திரிகை: என்ஐஏ தாக்கல்

புதுடெல்லி: குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி ஹெராயின் போதைப்பொருள் சிக்கிய வழக்கில் 2வது துணை குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்துள்ளது. குஜராத்தில் அதானி குழுமம் நிர்வகித்து வரும் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானுக்கு கன்டெய்னரில் அனுப்பிய இந்த போதைப் பொருளை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு … Read more

நிதிஆயோக் புதிய சிஇஓ பிவிஆர் சுப்பிரமணியம்

புதுடெல்லி: நிதி ஆயோக் புதிய சிஇஓவாக பிவிஆர் சுப்பிரமணியம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்பட்ட அவர் தற்போது உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியில் அவர் 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். இதை அடுத்து நிதிஆயோக் அமைப்பின் புதிய சிஇஓவாக ஆந்திராவை சேர்ந்த பிவிஆர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். 1987ம் ஆண்டு … Read more

ராகுல் வீடியோ வெளியீடு பாஜவின் மாயத்தால் பலனடைந்த அதானி

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசின் மந்திரத்தால் கோடீஸ்வர தொழிலதிபர் அதானி பலன் அடைந்ததாக குற்றம்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ பதிவில் ராகுல் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு மற்றும் நாட்டின் செல்வம் எப்படி எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றிபேசிய எனது கருத்துகள், உண்மைகள் அனைத்தும் நாடாளுமன்ற பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டன. நான் வணிகங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் ஒரு தனிநபர் மட்டுமே ஏகபோக … Read more

ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு உட்பட 20 இடத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: நிலக்கரி வரி விதிப்பு வழக்கில் அதிரடி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் எம்எல்ஏவின் வீடு உட்பட 20 இடங்களில் நிலக்கரி வரி விதிப்பு வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நிலக்கரி வரி விதிப்பு விவகாரத்தில், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலின் முன்னாள்  துணைச் செயலாளர் சவுமியா சவுராசியா உட்பட 8 பேர் மீது அமலாக்கத்துறை  பணமோசடி வழக்கு பதிவு செய்தது. பணமோசடி தடுப்புச் சட்டம்  தொடர்பான வழக்கை (பிஎம்எல்ஏ) விசாரிக்கும் ராய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த  ஜனவரி 30ம் … Read more

சிபிஐ விசாரணைக்கு வராத டெல்லி துணை முதல்வர்

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பர் 17-ம் தேதி கேஜ்ரிவால் அரசு, புதிய மதுபான கொள்கையை அமல் செய்தது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.2,800 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை, சிபிஐ தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. வழக்கில் குற்றம் சாட்டப்பட் டுள்ளன டெல்லி துணை முதல்வர் … Read more

கொழுந்தியாளை திருமணம் செய்து கொள்ள மனைவியை சால்வையால் நெரித்துக் கொன்ற டாக்டர்: காதலர் தினத்தில் ஆசை வார்த்தை கூறி மடக்கிய பரிதாபம்

பரேலி: கொழுந்தியாளை திருமணம் செய்து கொள்ள வேண்டி, மனைவியை சால்வையால் நெரித்துக் கொன்ற டாக்டரை உத்தரபிரதேச போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  உத்தர பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த டாக்டரான பரூக் ஆலம் என்பவர், கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று மனைவி நஸ்ரீனியிடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, ‘எனக்கும் உனக்கும் இடையிலான காதலை நிரூபிக்க நீ எனக்கு என்ன கொடுப்பாய்?’ என்று கேட்டார். அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த நஸ்ரீனி, ‘உங்களுக்காக எனது உயிரையும் … Read more

நாகாலாந்து தேர்தலில் வாக்காளர்களுக்கு மது வழங்குவதை தடுக்க 100 சோதனை சாவடி அமைத்து பெண்கள் கண்காணிப்பு

கோஹிமா: கடந்த 1989-ம் ஆண்டில் நாகாலாந்தில் மது விற்பனைக்கு முழு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து நாகாலாந்துக்கு மது கடத்தி வருவது அதிகரித்தது. இந்த சூழலில் அந்த மாநிலத்தில் வரும் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்க கடத்தல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. இதை தடுக்க நாகாலாந்து பெண்கள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். Source link

இந்தியா-பாக். எல்லையான குஜராத் ஹராமி நல்லாவில் புதைசேற்றிலும் ரோந்துப்பணி

இந்தியா – பாகிஸ்தான் எல்லையான, குஜராத்தில் உள்ள ஹராமி நல்லாவில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், புதைச் சேற்றில் சிக்காமல் இருக்க இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவருக்கொருவர் கயிறு கட்டி ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..  குஜராத் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியான கட்சு மாவட்டம் சர் க்ரிக் நீர்நிலைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. 1968-ல் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் இந்தியா தனது … Read more

திருப்பதி கோயில் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே பெண் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றும் வழக்கம்போல் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. இந்நிலையில் கோயில் அருகே உள்ள வராக சுவாமி பக்தர்கள் ஓய்வறை எதிரே உள்ள பொதுக்கழிவறையில் இருந்து திடீரென தீப்பற்றிய நிலையில் நேற்றிரவு பெண் ஒருவர் அலறி துடிக்கும் சத்தம் கேட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு … Read more

JNU-வில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்! கடும் கண்டனத்தை பதிவுசெய்த அரசியல் தலைவர்கள்

டெல்லி ஜே.என்.யூவில் மாணவ அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு மாணவர் மீது ஏ.பி.வி.பி யினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளர். மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு, இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் சென்றவர்கள், `ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை … Read more