விவசாயிகளின் வாழ்வை நானோ யூரியா எளிதாக்கும்: பிரதமர் மோடி டிவிட்

புதுடெல்லி: இந்தியாவின் முதன்மை உர கூட்டுறவு நிறுவனமான இப்கோ நானோ யூரியாவை கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை சந்தையில் விற்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “நாட்டிலுள்ள விவசாயிகளின் வாழ்வில்   மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நானோ யூரியா ஒரு பகுதியாகும். இந்த நானோ யூரியா விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கும்,’’ எனக் … Read more

டிஜே செய்த செயலால் திருமண வீடு துக்க வீடாக மாறிய சோகம்..!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் உள்ள மணிந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் (22). இவருக்குப் புதன்கிழமை அன்று இந்தர்வா கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது. அங்கு அப்போது அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். மணமகனின்முகம் மட்டும் இருக்கமாகவே இருந்தது. அங்குத் திருமணத்திற்காக டிஜே இசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் உரத்த சத்தத்தில் பாடல்களை இசைக்கத் தொடங்கியதால் மணமகனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இதனால் பாடல்களை நிறுத்துமாறு அவர் பல முறை சொல்லியுள்ளார். குறைந்தது சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். … Read more

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டு தண்ணீரை மாசுபடுத்திய மர்ம நபர்கள்..!

புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டிக்குள் ஆமைகளை விட்டு, தண்ணீரை மாசுபடுத்திய நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிந்தசாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆமைகளை சிலர் விட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், நேரு எம்.எல்.ஏ. போலீசாருடன் வந்து ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் தொட்டிக்குள் 2 ஆமைகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து, அதை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் குடிநீர் தொட்டியில் ஆமைகளை … Read more

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவையும் பதற வைக்குதே.. அந்தமான், குஜராத்தில் இன்று நிலநடுக்கம்!

டெல்லி: இந்தியாவில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ்,  இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமானதும் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி துளியும் உண்மை இல்லை..!!

தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது. வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டருடன் பீகார் மாநில அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். பீகாரில் இருந்த வந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். … Read more

கண்ணீர் வரவைக்கும் செய்தி..!! தாய் இறந்தது தெரியாமல் சடலத்தோடு 2 நாட்கள் வாழ்ந்த சிறுவன்!!

கர்நாடகா மாநிலம் பெங்களுரு நகரைச் சேர்ந்தவர் அன்னம்மா (40). அன்னம்மாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், வாடகை வீட்டில் தங்கியிருந்து அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து தனது மகனை படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் பிப்ரவரி கடைசியில் சில தினங்களாக அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் ஆளுநர் பதவி ஆகியவை எதிர்க்கட்சியினருக்கு எதிராக தவறாக கையாளப்படுவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா, சிபிஐ அமைப்பால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.  இதை சுட்டிக்காட்டி, பிரதமருக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன், … Read more

அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு

அந்தமான் : வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.  அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.

மணீஷ் சிசோடியா கைது விவகாரம் | சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

ஹைதராபாத்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டெல்லிமாநில துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். டெல்லி யில் கடந்த 2021-22ல் … Read more

RBI: 500 ரூபாய் நோட்டு பற்றிய முக்கிய தகவல்: உங்களிடமும் இந்த நோட்டு இருக்கா?

500 ரூபாய் நோட்டு லேட்டஸ்ட் அப்டேட்: சில ஆண்டுகளுக்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்பிறகு கரன்சி நோட்டுகள் தொடர்பாக பல்வேறு வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது 500 ரூபாய் நோட்டு பற்றிய பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பொதுவாக அனைவரிடமும் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது சகஜம். அப்படி உங்களிடமும் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.  500 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக வைத்திருக்கும் நபரா நீங்கள்? … Read more