‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தில் குஜராத்தில் ஏப்ரலில் நடக்க உள்ள ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ இலச்சினை வெளியீடு

சென்னை: ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் குஜராத்தில் ஏப்.17முதல் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்கான இலச்சினை, மையக்கருத்து பாடலை சென்னையில் மத்திய சுகாதாரத் துறைஅமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். இலவச பயணத்துக்கு பதிவு செய்வதற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். குஜராத் – தமிழகம் இடையிலான நல்லுறவை போற்றும் வகையில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ தொடக்க விழா சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் … Read more

2 நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகை

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், இரு நாட்டு தலைவர்களும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க உள்ளனர். மேலும், இந்த சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 22ம் தேதி உகாதி ஆஸ்தானம்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான்   கோயிலில் மார்ச் 22ம் தேதி   உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு முதலில் சுப்ரபாதம் செய்து பின்னர்  காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசுவாமி, விஷ்வக்சேனதிபதிக்கு சிறப்பு பிரசாதம் சமர்பிக்கப்படும். காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக சென்று கோயிலுக்குள் செல்ல உள்ளனர். அதன்பின், ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கும், உற்சவமூர்த்திக்கும் புது வஸ்திரம் அணிவிக்கப்படும்.  அதன் … Read more

தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ மீதான வழக்கில்: 19 நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: டெல்லி பிஎஃப்ஐ நிர்வாகிகள் மீதான வழக்கில் 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், ராஜஸ்தான், தெலங்கானா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில்4 குற்றப் பத்திரிகைகளை அந்தந்தமாநிலங்களின் என்ஐஏ நீதிமன்றங்களில் தாக்கல் செய்தது. இந்த வரிசையில் டெல்லி பிஎஃப்ஐ நிர்வாகிகள் தொடர்பான வழக்கில் அங்குள்ள … Read more

தேசிய டேபிள் டென்னிஸ் வெண்கலம் வென்றார் ஆகாஷ்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் யு-13 சிறுவர் பிரிவில் சென்னையை சேர்ந்த ஆகாஷ் ராஜவேலு, 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கத்துடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ஆகாஷ்.

மாடுகள் இழுத்து வந்த 120 அடி உயர தேர்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் உஸ்கூரில், பழமை வாய்ந்த மத்தூரம்மன் கோயிலில், ஆண்டுதோறும் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், தேரை பக்தர்கள் இழுக்காமல் மாடுகள் இழுத்து செல்லும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், நேற்று கோயில் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி 12 தேர்கள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. பிறகு மத்தூரம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து 120 அடி உயரம் கொண்ட தேர்களை, மாடுகள் இழுத்து வர பக்தர்கள் பின்தொடர்ந்து வந்தனர். சுமார் … Read more

இலங்கையில் உள்ளாட்சிகள் பதவி காலம் முடிந்தது: ஏப்ரலில் தேர்தல் நடக்காது என தகவல்

கொழும்பு:  இலங்கையில் உள்ள 340 உள்ளாட்சிகளில் பதவிக் காலம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 340 உள்ளாட்சிகளுக்கும் இம்மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்கவில்லை என்பதால் மார்ச் 9ம் … Read more

அட்மிஷனை ரத்து செய்துவிட்டு வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் செலுத்தியரூ.30 கோடி மீட்பு: யுஜிசி தலைவர் பேட்டி

புதுடெல்லி:  பல்கலைகழகங்களில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் ரூ.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானிய குழு தலைவர் தெரிவித்தார். பல்கலைகழக மானிய குழுவின்(யுஜிசி) தலைவர்  ஜெகதீஷ்குமார் நேற்று  கூறுகையில்,‘‘ பல்கலைகழகங்களில் படிக்கும் பல மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். சிறப்பான பல்கலைகழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். ஒரு பல்கலைகழகத்தில் சேர்ந்தவர்கள் பின்னர் விரும்பிய படிப்பில் கிடைத்தால் இன்னொரு பல்கலைக்கழகத்தில் சேருவார்கள். அவர்கள் செலுத்திய கல்வி … Read more

இம்ரான் கட்சியை தடைசெய்ய சட்ட ஆலோசனை: பாக். உள்துறை அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடைசெய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.  பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி(பிடிஐ)யின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் தோஷகானா பரிசு பொருள் முறைகேடு வழக்கிலும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கிலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தொடர்ந்து தப்பி வந்தார். இதற்கிடையே, தோஷகானா வழக்கில்  நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், இம்ரான் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் மாவட்ட … Read more

15 ஆண்டு பழமையான தனியார் வாகனங்களை அழிக்க விரைவில் கொள்கை

நாக்பூர்: பழைய அரசு வாகனங்களைப் போல, 15 ஆண்டுகள் பழமையான தனியார் வாகனங்களையும் அழிக்க விரைவில் கொள்கை கொண்டு வரப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறி உள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒன்றிய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஸ்வினி குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க ஒன்றிய அரசு கொள்கையை சமீபத்தில் கொண்டு வந்தது. இதே போல, பழைய தனியார் வாகனங்களை … Read more