இவ்வளவு ஆழமாக யாரேனும் காதலிக்க முடியுமா..? கலங்கி போன குடும்பத்தினர..! நெகிழ்ச்சி வீடியோ

அசாம் மாநிலம் கௌகாத்தி நகரைச் சேர்ந்தவர் பிதுபன் தமுளி (27). இந்த இளைஞர், வெள்ளை போர்வையில் உயிரிழந்து படுத்திருக்கும் பிராத்தனா போரா என்ற அவரின் காதலியின் நெற்றியிலும், இரு கன்னங்களிலும் குங்குமத்தை வைக்கிறார். பின்னர், பிரத்தானாவிற்கு வெள்ளை மாலையை ஒன்றையும் அணிவித்துக்கொண்டு, பிரத்தானாவின் ஒப்புதலை வாங்குவது போன்று செய்து, தனக்கும் ஒரு மாலையை அவர் அணிவித்துக்கொண்டு, திருமண சடங்கை நிறைவேற்றினார். இதையடுத்து தனது காதலியை உண்மையாக உருகி உருகிக் காதலித்ததாகத் தெரிவித்த அந்த இளைஞர், அவரைத் தவிர … Read more

தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பு

புதுடெல்லி: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல்  புதிய தேர்தல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த மே மாதம் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுசில் சந்திரா ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அந்த பொறுப்பு காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக நவம்பர் 18ம்  தேதி … Read more

கைலாசாவின் அடுத்த ஆஃபர்…

 கைலாசாவில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாசா கிளைகளில் தகுந்த ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு என விளம்பரம் வெளியிடப்பட்டது. ஓராண்டு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு பிறகு வெளிநாட்டு கைலாசாக்களில் IT wing, அயல்நாட்டு தூதரகம்,பிளம்பிங், எலக்ட்ரிக்கல்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தொடர்பு கொள்வதற்காக இரண்டு செல்போன் எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன.இதனை சோதனை செய்வதற்காக தொடர்புப்கொண்டு பேசிய போது எல்லாதுறையிலும் … Read more

டீ பாக்கியை தராத பா.ஜனதா எம்.எல்.ஏ… நடுரோட்டில் காரை மறித்த டீ வியாபாரி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு பாஜக முக்கிய தலைவர்கள் தங்கள் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண் சிங் வர்மா தனது தொகுதியில் காரில் சென்றுள்ளார். அப்போது செஹோர் மாவட்டத்தில் உள்ள இச்சாவார் பகுதியில் அவர் காரை மறித்த டீ கடை உரிமையாளர் ஒருவர் வாக்குவத்தில் ஈடுபட்டார். அதாவது முன்னர் டீ கடைக்காரரின் கடையில் டீ குடித்த கரண் … Read more

மங்களூருவில் ஆட்டோ குண்டு வெடிப்புக்கு முன்னதாக ஷிமோகாவில் ஒத்திகை பார்த்த ஷரீக் – என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பெங்களூரு / கோவை / உதகை / நாகர்கோவில்: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவத்துக்கு முன்பாக முகமது ஷரீக் தனது நண்பர்கள் 2 பேருடன் ஷிமோகாவில் குண்டை வெடித்துப் பார்த்து, ஒத்திகையில் ஈடுபட்டது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. மங்களூரு அருகே சாலையில் சென்ற ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்ததில், ஆட்டோ ஓட்டுநர், அதில் பயணித்த முகமது ஷரீக்(24) ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து குக்கர், … Read more

புனேயில் பரபரப்பு அடுத்தடுத்து 48 வாகனம் மோதி 38 பேர் படுகாயம்

புனே: புனேயில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 38 பேர் காயம் அடைந்தனர். 48 வாகனங்கள் சேதம் அடைந்தன. அதிருஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நேற்று முன்தினம், புனேயில், புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவாலே பாலத்தில் நடந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், புனே பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் … Read more

சாலையோர கோயிலில் வழிபாடு.. கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி 12 பக்தர்கள் பலி!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் தேஸ்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நயா காவ்ன் தோலா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கிராமம் ஹாஜிபூர்-மஹ்னார் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முன்னதாக கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்த போது, ​​அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் ஹாஜிபூர் சதர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலர் … Read more

தலித் பெண் தண்ணீர் குடித்ததால் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த மக்கள்: பசு கோமியம் ஊற்றி கழுவினர்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், சாமராஜாநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதரா கிராமத்தில் கடந்த 18ம் தேதி நடந்த திருமணத்துக்கு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது தெருவில் இருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததாக தெரிகின்றது. இந்த குழாய் மேல் சாதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் குழாய் என்றும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் பயன்படுத்தியதாகவும் சர்ச்சை உருவானது. இதன் காரணமாக குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, தொட்டியை பசு கோமியத்தால் கழுவியதாகவும் கூறப்படுகிறது. … Read more

கட்டணம் ரூ.38 ஆயிரம் இறுதி சடங்கு நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனம்: அஸ்தி கரைக்கும் வரை காரியம் கச்சிதம்

மும்பை: மனிதன் வாழ்வில் மரணம் சோகமானது. அனைத்துமே இயந்திரமயமாகி விட்ட இவ்வுலகில் உயிருடன் இருக்கும் போதே நாமே நமக்கான இறுதி சடங்கை முன்பதிவு செய்வதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டன. மும்பையை சேர்ந்த இந்த புதிய நிறுவனம், ஒருவரின் இறுதி சடங்குக்கான அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.38 ஆயிரம் வசூலிக்கிறது. ஆம்புலன்ஸ், இறுதி சடங்குகளுக்கான பொருட்கள்,  அஸ்தி கரைப்பது உள்பட அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்படும் என்று நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

 மனைவி புகாரில் மபி காங். எம்எல்ஏ மீது பலாத்கார வழக்குபதிவு

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்ஹார். இவர் இயற்கைக்கு மாறான உறவு கொள்ள வற்புறுத்துவதாகவும், குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவரது மனைவி போலீசில் புகார் கூறி உள்ளார். மேலும், கள்ளக்காதலி சோனாலி பரத்வாஜ் என்பவரின் தற்கொலையிலும் எம்எல்ஏவுக்கு தொடர்பிருப்பதாக  நவ்கான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்எல்ஏ உமாங் சிங்ஹார், … Read more