நடிகை மரண வழக்கு: சிபிஐக்கு மாற்றம்

பனாஜி: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரைத்துள்ளார். அரியானா பாஜக மூத்த பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத், கோவாவின் அஞ்சுனா பகுதியிலுள்ள கர்லீஸ் விடுதியில் கடந்த 23ம் தேதி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சோனாலி போகாத் பெற்றோர் முறையிட்டனர். இவ்வழக்கில் சோனாலி போகத் உடன் கோவாவிற்கு வந்த சுதீர் சாக்வன், சுக்வீந்தர் சிங் … Read more

நடிகை சோனாலி போகட் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு கோவா அரசு பரிந்துரை

சண்டிகர்: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகட் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். ஹரியாணா அரசு மற்றும் சோனாலி போகட் குடும்பத்தினரின் தொடர் வேண்டுகோளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து கோவா முதல்வர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவா காவல் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நல்ல முறையில் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. கோவா போலீசார் சிறப்பாக வழக்கை … Read more

நடிகை சோனாலி போகத் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

நடிகை சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐ விசாரணை நடத்த கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த் பரிந்துரை செய்துள்ளார். கோவா கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு நடிகை சோனாலி போகத் கொலை செய்யப்பட்ட வழக்கை அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சோனாலி மகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ள கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த், அதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் … Read more

அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என கூற இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெனரேட்டரில் உள்ள பேட்டரி திருட்டு… டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை! உ.பி.யில் அவலம்!

உத்தரபிரதேசத்தில் டார்ச்லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனர். டார்ச்லைட் வெளிச்சத்தில் ஒரு மருத்துவர் ஒரு பெண் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து பரிசோதிப்பதும், மற்றவர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதையும் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஜெனரேட்டரில் பொருத்தப்படும் பேட்டரி அடிக்கடி திருடப்படுவதால், … Read more

சிஇஓ ஆதர் பூனாவாலா பெயரை பயன்படுத்தி சீரம் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி மோசடி கண்டுபிடிப்பு

புனே: சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவாலா பெயரைக் கூறி, அந்நிறுவனத்திடம் மர்ம நபர் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளார். இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. புனேயைத் தலைமையிடமாகக் கொண்ட இந் நிறுவனத்தின் சிஇஓ-வாக ஆதர் பூனாவாலா உள்ளார். கடந்த 7-ம் தேதி இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சதீஷ் தேஷ்பாண்டேவுக்கு வாட்ஸ்அப்பில் பூனாவாலாவின் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் சில வங்கிக் கணக்குகள் குறிப்பிடப்பட்டு அவற்றுக்குரூ.1 கோடி அளவில் பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந் … Read more

அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்சுக்கு வழங்கியதை எதிர்க்கும் ஓபிஎஸ் வழக்கின் விசாரணை தொடங்கியது

டெல்லி: அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்சுக்கு வழங்கியதை எதிர்க்கும் ஓபிஎஸ் வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. ஓபிஎஸ் அதிமுக உறுப்பினரே இல்லை என  ஈபிஎஸ் பதில்மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது.

நோயாளிக்காக மருத்துவமனைக்கு 3 கி.மீ ஓடிச்சென்ற மருத்துவர்! நெகிழ்ச்சிப் பின்னணி!

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனைக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி சென்ற நெகிழ்ச்சி சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான கோவிந்த் நந்தகுமார், நோயாளி ஒருவருக்கு அவசர லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்வதற்காக பெங்களூருவில் உள்ள சர்ஜாபூர் மணிபால் மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனைக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார் … Read more

சோனியா காந்தியுடன் விரைவில் நிதிஷ், லாலு சந்திப்பு- தேஜஸ்வி யாதவ் தகவல்

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், கூட்டணிக் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவும் விரைவில் சோனியா காந்தியை சந்திப்பார்கள் என்று அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “நாம் ஒவ்வொரு எதிர்க்கட்சியினரையும் ஒன்றிணைக்க வேண்டும். சோனியா காந்தி இந்தியா திரும்பி வந்ததும் ஒரு சந்திப்பு இருக்கும். அவரை நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக சென்று சந்திப்பார்கள். நாங்கள் அனைத்து எதிர்gகட்சியினரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்” என்றார். பிஹார் … Read more

ஆர்எஸ்எஸ் டவுசரில் தீ வச்ச காங்கிரஸ்: மக்களவைத் தேர்தலுக்கு புது ரூட்டில் பயணம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளதால் காங்கிரஸ் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார் ராகுல் காந்தி. நாடு முழுவதும் மக்களை ஈர்க்கும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். பாரத் ஜூடோ யாத்திரை என்று கூறப்படும் ஒற்றுமையின் யாத்திரையை மேற்கொண்டுள்ள நிலையில் பாஜகவினர் இது குறித்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். நடை பயணத்தில் விலையுயர்ந்த சொகுசு கேரவன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று சமூக வலைதளங்களில் … Read more