Breaking: பெய்ஜிங் சென்ற ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: களத்தில் இறங்கிய IAF

டெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்குச் சென்ற மஹான் ஏர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அந்த விமானம் டெல்லி ஏடிசியை தொடர்பு கொண்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த விமானம் இந்திய வான்வெளியை விட்டு வெளியேறியது. இந்த திடீர் நெருக்கடிக்கு எதிர் நடவடிக்கையாக, இந்திய விமானப்படை (IAF) பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமானத் தளங்களில் இருந்து அதன் சுகோய் Su-30MKI போர் விமானங்களைக் கொண்டு அந்த … Read more

உ.பி.யில் நவராத்திரி துர்கா பூஜை விழாவில் பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப பலி.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

பதோஹி: உத்திரப்பிரதேசத்தின் பதோஹியில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டு, நவராத்திரி செப்டம்பர் 26ம் தொடங்கி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் முக்கிய நிகழ்வாக துர்கா பூஜை பண்டிகை நேற்று நாட்டின் வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில்  அமைக்கப்பட்டிருந்த துர்கா பந்தலில் இரவு 9:30 … Read more

Prachand: மேட் இன் இந்தியா… IAFல் இணைந்த இலகுரக ஹெலிகாப்டர்!

Made in India எனப்படும் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகம் ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாதுகாப்புத் துறையில் அதிநவீன ஆயுதங்கள், விமானப்படை ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்துள்ள இலகுரக ஹெலிகாப்டர் அதிக உயரமான மலைப் பகுதிகளில் திறம்பட செயல்படக் கூடியது. இதற்கு ’பிரச்சாண்ட்’ (Prachand) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் … Read more

நாட்டின் பாதுகாப்பை விமானப்படை பலப்படுத்துகிறது: ராஜ்நாத் சிங்

டெல்லி: இந்திய விமானப்படை தனது அசாத்திய தைரியம், வீரத்தால் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டருக்கு பிரசந்த் என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

டெல்லி: இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சீனாவில் விமானம் தரையிறங்க உள்ள நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்திய விமானப்படை கண்காணித்து வருகிறது.

எச்சரிக்கைகளில் அலட்சியம் கூடாது.. அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை..!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மூலமாக வரும் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து அமைச்சக செயலாளர்களும் கலந்துக் கொண்டனர். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி சில பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்தார். இதையடுத்து எந்த … Read more

'பிரிட்டிஷ் பேரரசை காந்தி எதிர்த்து போராடியது போல், காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங். போராட்டம்': கொட்டும் மழையில் ஆவேசமாக பேசிய ராகுல்காந்தி..!!

பெங்களூரு: பிரிட்டிஷ் பேரரசை காந்தி எதிர்த்து போராடியது போல் காந்தியை சுட்டுக்கொன்ற சித்தாந்தத்துடன் காங்கிரஸ் இன்று போராடி கொண்டிருப்பதாக கொட்டும் மழையிலும் ராகுல் காந்தி ஆவேசத்துடன் பேசியுள்ளார். தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைசூரில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச வந்தபோது திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. ஆனாலும் கனமழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே உரையை தொடர்ந்தார் ராகுல் காந்தி. இடைவிடாது மழைக்கு மத்தியில் … Read more

கொட்டும் மழையில் ராகுல் செய்த தரமான சம்பவம்… திருப்புமுனை ஏற்படுத்துமா மைசூரு?

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பலம் வாய்ந்த பாஜகவை வீழ்த்த முடியுமா? என்பது தான் பல்வேறு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் மட்டுமே சாத்தியம் என்று சொல்லப்படும் நிலையில், அரசியல் களம் புதிய திருப்பங்களை அளித்து வருகிறது. இருப்பினும் காங்கிரஸை தூக்கி நிறுத்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் இனிமேல் அவ்வளவு தான் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கையில் புது ரத்தம் பாய்ச்ச இந்திய ஒற்றுமை பயணத்தை … Read more

முலாயம் சிங் ஐசியுவில் அனுமதி

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங் உடல் நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் (வயது 82), உடல் நலக் குறைவால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. இதனால் உடனடியாக அவர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், முலாயம் சிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் சமாஜ்வாடி கட்சி … Read more

டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்..!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் இரட்டை சாதனைகளைப் படைத்தார். குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் எடுத்தது,  மற்றொன்று டி 20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் வரிசையில் மூன்றாவதாக இணைந்தது என்ற சாதனைகளை படைத்தார். அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்தவர்களில் முதலாம் இடத்தில் விராட் கோலியும், இரண்டாம் இடத்தில் கே.எல்.ராகுலும் உள்ளனர் Source link