விளம்பரத்தில் நேரு படம் புறக்கணிப்பு – திப்பு சுல்தான், சாவ‌ர்க்கர் ப‌டங்கள் கிழிப்பால் கர்நாடகாவில் பதற்றம்

பெங்களூரு: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை யொட்டி பாஜக அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வல்லபபாய் படேல், அம்பேத்கர், பகத் சிங், சாவர்க்கர் உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சுதந்திர தினத்தை … Read more

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து – பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், சந்தன்வாரி என்ற இடத்தில் இருந்து பகல்ஹாம் பகுதிக்கு, இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 37 வீரர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் காவலர்கள் இரண்டு பேர் என மொத்தம் 39 பேர் ஒரு பேருந்தில் சென்றனர். சந்தன்வாரி என்ற இடத்தில், பேருந்து வந்த போது … Read more

கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேர் விடுதலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

குஜராத்: குஜராத்தில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேரை விடுதலை செய்ததையடுத்து மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர். குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணியை கூட்டு பாலியல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேர் விடுதலை பெற்றனர். இந்தியாவில் மிக மோசமான கலவரம் 2002-ல் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகும். கலவரத்தின்போது  கர்ப்பிணியை வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்தனர்.

“இந்திய குடிமகனுக்கான எல்லா சுதந்திரமும் என் தந்தைக்கு உடைக்கப்பட்டது”-பத்திரிகையாளர் மகள்

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள், நேற்றைய சுதந்திர தின விழாவில் பள்ளி அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்றிருந்திருக்கிறார். தனது அந்த உரையில், `நான் மேஹ்னாஸ் கப்பன். பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள். ஒரு குடிமகனின் சுதந்திரம் அனைத்தும் உடைக்கப்பட்டு, இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட ஒரு குடிமகன் அவர்’ என்று பேசியுள்ளார். சித்திக் கப்பன், டெல்லி வாழ் மலையாள பத்திரிகையாளர். அவர் UAPA (Unlawful Activities (Prevention) Act) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் … Read more

பெங்களூருவில் முதல் முறையாக ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பெங்களூரு சாம்ராஜ்பேட்டை யில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அண்மையில் கர்நாடக அரசு அந்த மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது என அறிவித்தது. Source link

பில்கிஸ் பானு vs நிர்பயா: துரத்தும் மனசாட்சி!

‘கர்ப்பமாக இருக்கிறேன் என்னை விட்டு விடுங்கள்’ என்ற பில்கிஸ் பானுவின் அழுகுரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டுள்ளன. அப்போது அவருக்கு வயது 19. ஆனாலும், அவரை விடாமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கும்பல், அதற்கு முன்பு பில்கிஸ் பானுவின் 3 வயது பெண் குழந்தையை அவரிடம் இருந்து பிடுங்கி அருகில் இருந்த கல்லில் ஒங்கி அடித்து கொன்றது. அந்த பிஞ்சுக் குழந்தை எவ்வளவு வலியுடன் உயிரிழந்திருக்கும் என்று நினைக்கும் போதே கண்களில் வடியும் நீரை கட்டுப்படுத்த … Read more

பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு

பீகார்: பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயகுமார் சவுத்ரி- நிதித்துறை, தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல், வனத்துறையை ஒதுக்கியுள்ளனர்.

காஷ்மீர் | ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி

காஷ்மீர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் பலியானார்கள். பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இந்திய – சீன எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்ற வாகனம் காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. விபத்துக்குள்ளான வாகனத்தில் பாதுகாப்புப் படையினர் 37 பேர் இருந்துள்ளனர். விபத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் 6 பேர் பலியாகினர். 31 பேர் … Read more

'யாரா இருந்தாலும் கை, கால்களை உடைங்க..!' – சர்ச்சையில் ஆளுங்கட்சி எம்எல்ஏ!

“எதிர்த்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கால்களை உடையுங்கள்” என, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ பிரகாஷ் சர்வே பேசி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, தற்போது, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரே தரப்பு என, இரு தரப்பாக செயல்பட்டு வருகிறது. சிவசேனா கட்சிக்கு … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் காயம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர்: சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆப்பிள் தோட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தவர்களின் சகோதரர் படுகாயமடைந்தார்.