6 வயது சிறுமியையும், தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது.!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், 6 வயது சிறுமியையும் அவள் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 25 ஆம் தேதி தாயும் மகளும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளானதை மருத்துவப் பரிசோதனை உறுதி செய்தது. மன நலம் பாதிக்கப்பட்டதால் தாயால் வாக்குமூலம் தர இயலவில்லை. காவல்துறையினர் மின்னணு சாதனங்கள் ,கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தும் 150  பேரிடம் விசாரணை நடத்தியும் குற்றம் செய்தவர்களை சுற்றி … Read more

பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல்

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குவது வழக்கம். மேலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவார். தலிபான் தீவிரவாதிகளுடன் இந்துத்துவா தீவிரவாதிகளை ஒப்பிட்டு அவர் சொன்ன கருத்து வைரலானது. இந்நிலையில், ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்தக்கடிதத்தில், ‘தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகப் பேசி வந்தால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை மும்பை வெர் … Read more

உதய்பூர் கொலை | விசாரணையை தொடங்கியது என்ஐஏ – கன்னையா குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசு ரூ.51 லட்சம் நிதி

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) தனது விசாரணையை தொடங்கியது. இதில் குற்றவாளிகளைப் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, … Read more

“நாட்டின் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் 8 ஆண்டுகளில் 20 மடங்கு உயர்வு” – பிரதமர் மோடி

இந்தியாவில் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் கடந்த எட்டாண்டுகளில் 20 மடங்கு அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூரில் கட்டப்பட்டுள்ள போஷ் ஸ்மார்ட் வளாகத்தைப் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்காக இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். சூழலை மாசுபடுத்தாமல் இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாகவும், அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார். ஜெர்மனியின் போஷ் நிறுவனம் இந்தியாவில் தொழில்தொடங்கி … Read more

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முர்மு, சின்கா மனுக்கள் ஏற்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. 107 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் … Read more

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது – ககன்யான், சந்திராயன்-3 ஏவுதல் எப்போது?

சென்னை: பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் ‘டிஎஸ்-இஓ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. விண்வெளி ஆய்வில் தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக 2019-ம் ஆண்டு என்எஸ்ஐஎல் என்ற அமைப்பும், 2020-ல் இன்ஸ்பேஸ் என்ற அமைப்பும் நிறுவப்பட்டன. அதன்படி என்எஸ்ஐஎல் அமைப்பு மூலம் சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 … Read more

கோவில் திருவிழாவின் போது ஆபத்தான முறையில் டிராக்டர்களில் வீலிங்.. டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் காயம்..!

கர்நாடகா மாநிலம் சமக்கிரி கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது சிலர் ஆபத்தான முறையில் டிராக்டர்களில் வீலிங் சாகசம் செய்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.  பிரம்மலிங்கேஸ்வரா கோவில் திருவிழாவை காண ஏராளாமான மக்கள் வந்திருந்தனர். அங்கு சாலையில், டிராக்டரின் முன் சக்கரங்களை தூக்கியவாறு, பின் சக்கரங்களில் டிராக்டரை இயக்கி சிலர் சாகசம் செய்தனர். அப்போது, வீலிங் ஆன டிராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதில் 10பேர் காயமடைந்தனர் Source link

சுகேஷ் சிறை மாற்ற வழக்கு; உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திர சேகர் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி.தினகரனுக்கு வாங்கித்தர தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், டெல்லியில் இருக்கும் தன் மீதான அனைத்து முறைகேடு வழக்குகளையும் கர்நாடகா அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும். திகார் சிறையில் இருக்கும் … Read more

ஆர்எஸ்எஸ் தொண்டர் டு மகாராஷ்டிர முதல்வர் – யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளன. சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் புதிய முதல்வராக நேற்று பதவியேற்றார். முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 44, தேசியவாத காங்கிரஸுக்கு 54 இடங்கள் கிடைத்தன. … Read more

நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா..!

நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஷாருக்கான், அமிதாப்பச்சன்,  விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  Source link