குடியுரிமையை துறந்து வரும் இந்தியர்கள் – எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

உள்துறை அமைச்சகம் மக்களவையில் வெளியிட்ட தகவலின்படி, 2021 ஆம் ஆண்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாதது ஆகும். 78,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளனர். இது மற்ற அனைத்து நாடுகளிலும் மிக உயர்ந்தது. இரட்டை குடியுரிமையை இந்தியா அனுமதிக்காது. சீனாவில் வசிக்கும் 362 இந்தியர்களும் சீன குடியுரிமை பெற்றுள்ளனர்.ஃபஸ்லுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “தனிநபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக … Read more

பீகாரில் நாகபஞ்சமியை முன்னிட்டு பாம்பு திருவிழா கொண்டாடும் கிராம மக்கள்: கோயிலில் ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு

பாட்னா: பீகாரில் நாகபஞ்சமியை முன்னிட்டு பாம்பு திருவிழா வினோதமான முறையில் கொண்டாடப்பட்டது. பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள காளி கோயிலில் நாகபஞ்சமியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இதில் அந்த மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள பாம்பாட்டிகள் கலந்து கொண்டனர். நாகபஞ்சமியை முன்னிட்டு ஒன்றாக கூடும் பாம்பாட்டிகளும், கிராம மக்களும் ஆற்றில் இறங்கி, மீன்பிடிப்பதை போல ஆர்வமுடன் பாம்புகளை பிடித்தனர். கைகளிலும், தலையிலும், கழுத்திலும் உயிருடன் உள்ள பாம்புகளை சுற்றிக்கொண்டு, மேளதாளமுடன் ஊர்வலமாக சென்றனர். வயது … Read more

கேரளா: நீட் தேர்வில் மாணவிகள் உள்ளாடைகளை களையச் செய்த விவகாரம் – 5 பெண்கள் கைது!

கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை களையச்சொல்லி தேர்வு எழுதக் கூறிய சர்ச்சையில் 5 பெண்களை அம்மாநில காவல் துறை கைது செய்துள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் அயூரில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி, அதன்பின் தேர்வு எழுத அனுமதித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மாணவியின் தந்தை அளித்த புகாரில் அம்மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இவ்வழக்கில் 5 … Read more

அனைத்து வழக்குகளிலும் முகமது ஜுபைருக்கு ஜாமின் – உச்ச நீதிமன்றம் அதிரடி!

சமூக அமைதியை சீர்குலைத்ததாக உத்தர பிரதேச மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக ‘ஆல்ட் நியூஸ்’ செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜுபைர் செயல்பட்டு வருகிறார். இவர், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக, கடந்த 2018 ஆம் ஆண்டு, சமூக வலைதளமான ட்விட்டரில் கருத்து பதிவிட்டதற்காக, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் … Read more

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது: பிரகலாத் ஜோஷி பேட்டி

டெல்லி: விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடத்தில் உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த பிறகு முறையான விவாதம் நடைபெறும் எனவும் கூறினார்.

20 கி.மீ வேகத்தில் பயணிக்கும்போது மின்சார வாகனங்களில் சத்தம் வரவேண்டும்! புதிய சட்டம்!ஏன்?

மின்சார வாகனங்கள் மணிக்கு 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் தயாரிக்கப்படவேண்டும் என்ற புதிய விதிமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளிவரும் சத்தத்தைவிட, மின்சார வாகனங்களில் இருந்து வெளிவரும் சத்தம் குறைவுதான். அவை குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது சத்தம் கேட்காது. இதனால் சாலையில் நடந்துசெல்வோர், சைக்கிளில் பயணிப்போர், பார்வை சவால் உடைய மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைய வாய்ப்பு உள்ளது. இதனை … Read more

இந்திய குடியுரிமையை துறந்த 1.63 லட்சம் இந்தியர்கள்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் 2015-ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை மொத்தம் 9.24 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் … Read more

முல்லைபெரியாறில் புதிய அணை அமைக்க வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு: அமைச்சர் ரோஷி அகஸ்டின்

திருவனந்தப்புரம்: முல்லைபெரியாறில் புதிய அணை அமைக்க வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு என அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார். அணையின் நீர்மட்டம் 136 அடி என்பதே கேரளாவின் அடுத்த நிலைப்பாடும் கூட, இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். முல்லைபெரியாறில் புதிய அணைக்கான இடம் கண்டறிப்பட்டு திட்ட மதிப்பீட்டு அறிக்கையும் தயார் என அமைச்சர் கூறினார்.

22ல் காவிரி ஆணைய கூட்டம்: மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு

பெங்களூரு / புது டெல்லி: கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வ‌ந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. ஆணையத்தின் த‌லைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள‌ மேகேதாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள‌ தமிழக அரசு, மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் … Read more

ஒரே பேருந்தில் ஓட்டுநர், நடத்துனராக பணியாற்றும் கேரள தம்பதி: 20 ஆண்டுகளாக காதலித்து கொரோன ஊரடங்கில் கரம் பிடித்தவர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த காதல் தம்பதி ஒரே அரசு பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனராக பணியாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த கிரி மற்றும் தாரா காதல் தம்பதி. அம்மாநில அரசு பேருந்து ஒன்றில் கிரி ஓட்டுநராகவும், தாரா நடத்துனராகவும் பணியாற்றி வருகிறார். 20 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கொரோன ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்தனர். இந்த பேருந்தில் பயணிகள் பாதுகாப்பிற்காக 6 சிசிடிவி, அவசரகால் சுவிட்ச்கள், இனிமையான … Read more