சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகருடன் சந்திப்பு – தனி அணியாக செயல்பட போவதாக அறிவிப்பு
புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேர் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் தனி அணியாக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு சமீபத்தில் கவிழ்ந்தது. சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். அதன்படி சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் … Read more