கஞ்சா சாக்லேட்.. கோவையில் வட மாநில வியாபாரி சுற்றிவளைப்பு !!

மாணவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அங்கு சந்தேகப்படும்படி செயல்பட்டவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மாணவர்களை குறிவைத்து போதை சாக்லேட் விற்பனை செய்துவந்தது அம்பலமானது. இதனையடுத்து போதை சாக்லேட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேத்தன் … Read more

எம்எல்ஏக்களுக்கு லஞ்சமாக பணம், கேளிக்கை வசதிகள் முர்மு மீது தேர்தல் நடத்தை மீறல் புகார்: கர்நாடக காங்கிரஸ் ஆணையத்திற்கு கடிதம்

புதுடெல்லி: எம்எல்ஏக்களுக்கு லஞ்சமாக பணமும், கேளிக்கை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக கர்நாடக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளது. கர்நாடகா மாநில காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், ‘கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களிக்கும் எம்எல்ஏக்களை ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்கு வரவழைத்து, அவர்களுக்கு தேவையான வசதிகள் … Read more

எலெக்ட்ரிக் வாகன பிரிவுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: டிவிஎஸ் மோட்டார்ஸ்

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகப்படுத்த ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம். கடந்த ஆண்டும் ரூ.1000 கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்தது. நடப்பு ஆண்டு இறுதியில் மாதத்துக்கு 25000 மின்சார வாகனங்களை தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல விரைவில் மாதத்துக்கு 50000 வாகனங்களை தயாரிக்கவும் டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. 2025-ம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கணிசமான இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் டிவிஎஸ் மோட்டார்ஸ் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான … Read more

முகமது ஜுபைருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆல்ட் நியூஸ் துணை நிறுவனரான முகமது ஜுபைரை, இடைக்கால ஜாமீனில் உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்துக் கடவுள்களை அவமதித்ததாகவும் உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முகமது ஜூபைர் சிறையில் அடைக்கப்பட்டார், இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கூறி உச்ச நீதிமன்றத்தில் ஜூபைர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட், சூரிய காந்த், … Read more

நடிகை பலாத்கார வழக்கு திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் கூடுதல் குற்றப்பிரிவுகளை சேர்க்க முடிவு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் கூடுதல் குற்றப்பிரிவுகளை சேர்க்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.மலையாள நடிகை பலாத்கார வழக்கு கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடர் விசாரணை நடத்தி வழக்கை முடிக்க குற்றப்பிரிவு போலீசார், மேலும் 3 வார அவகாசம் கேட்டபோதிலும் கேரள உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. வரும் 22ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக … Read more

“முகமது ஜூபைரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதில் நியாயம் இல்லை” – உச்சநீதிமன்றம்

சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பதிவுகளை பதிவிட்டதாக பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் மீது உத்தரபிரதேச காவல்துறையினரால் பல்வேறு காலகட்டங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் சமீபமாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ், ஜாஜியாபாத், முசாபர்நகர், லக்கீம்பூர், சீத்தார்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 6 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக்கோரி முகமது ஜுபைர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

பாரதியின் பாடலைப் பாடிய அருணாச்சல் சகோதரிகள்: பிரதமர் மோடி மகிழ்ச்சி ட்வீட்

புதுடெல்லி: சுப்ரமணிய பாரதியாரின் தமிழ் தேசபக்திப் பாடலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் பாடுவதைப் பார்த்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் அடைந்தேன். ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் … Read more

நல்லெண்ணெய் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து -குடம், வாளியில் எடுத்துச்சென்ற மக்கள்

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் நல்லெண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததையடுத்து அப்பகுதி மக்கள் வாளி, குடம் போன்றவற்றில் நல்லெண்ணெய்யை எடுத்துச் சென்றனர். 18 ஆயிரம் லிட்டர் நல்லெண்ணெய்யை ஏற்றிச் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. இதனையடுத்து டேங்கர் லாரியில் இருந்த நல்லண்ணெய் முழுவதும் கீழே கொட்டி அங்கு இருந்த சிறிய குட்டையில் தேங்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் குட்டையில் தேங்கி இருந்த நல்லெண்ணெய்யை குடம், வாளி போன்றவற்றில் எடுத்துச்சென்றனர். … Read more

விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து கொட்டிய சமையல் எண்ணெய் ஆறாக ஓடியது: போட்டிப்போட்டு பிடித்த கிராம மக்கள்

திருமலை: ஆந்திராவில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து வழிந்தோடிய சமையல் எண்ணெயை மக்கள் போட்டிப்போட்டு பிடித்து சென்றனர். ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சல்லகுண்டலா கிராமப்பகுதி வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில்  இன்று காலை 6 மணியளவில் சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றது. அந்த லாரி, திடீரென சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் உடைப்பு ஏற்பட்டு சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக … Read more

கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு – நூதன விளம்பரம் செய்த நபர்

கர்நாடகாவில் காணாமல் போன கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு என நூதன விளம்பரம் செய்துள்ள பறவையின ஆர்வலரின் செயல் அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் நகர் பகுதியில் வசித்து வருபவர் விலங்கின மற்றும் பறவையின் ஆர்வலர் ரவி. இவரது குடும்பத்தினரும் விலங்கு இனங்கள் மற்றும் பறவை இனங்களை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இவர் தனது வீட்டில் ‘ருஸ்துமா’ என்ற பெயரிடப்பட்ட இரண்டு ஆப்பிரிக்க … Read more