ரூ.50 ஆயிரம் கோடியில் 8 சாலை திட்டத்துக்கு ஒப்புதல்

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம், ரூ.50,655 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, ரூ.50,655 கோடி முதலீட்டில் 936 கிமீ அளவுக்கு 8 தேசிய வேக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 9 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்களால், பயண நேரம் பாதியாக குறையும் என்றும் 4.4 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 361 ஆக அதிகரிப்பு: சூரல்மலா, முண்டக்கை, அட்டமலாவில் இனியும் மக்கள் வாழ முடியுமா?

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. சாலியாற்றில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இன்னும் 206 பேர் வரை காணவில்லை. நிலச்சரிவினால் மொத்தம் 1,208 வீடுகள் இடிந்தன. இதில் முண்டக்கையில் 540 வீடுகளும், சூரல்மலாவில் 600 வீடுகளும், அட்டமலையில் 68 வீடுகளும் முற்றிலும் சிதைந்துள்ளன. இதனால் இந்தப் பகுதிகளில் இனியும் மக்கள் வாழ முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மொத்தம் 49 குழந்தைகள் நிலச்சரிவில் காணவில்லை … Read more

சித்தா முதல் விடுதலை வரை! பிலிம்பேரில் விருதை அள்ளிய படங்கள்!

69வது சோபா பிலிம்பேர் விருதுகள் ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நிறைய தமிழ் படங்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.  

மேற்கு வங்கத்தில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, கொல்கத்தாவைச் சுற்றி அமைந்துள்ள ஹவுரா, சால்ட் லேக், பாரக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ் வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையமும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. விமான நிலைய ரன்வே,டாக்ஸிவே முழுவதும் சுமார் 2 அடிஉயரத்துக்கு வெள்ள நீர் … Read more

அணு மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு: ராஜஸ்தானில் போலீஸார் மீது கல்வீச்சு

உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மஹி பகுதியில் அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இங்கு 2,800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அணு மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் சோட்டி சர்வான் கிராமத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இங்கு அணு மின் நிலையம் அமைவதற்கு சோட்டி சர்வான் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து … Read more

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்ட அம்சங்கள் ஆராயப்படும்: அமைச்சர் சுரேஷ் கோபி

கேரளா: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து இன்று 6-வது நாளாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வயநாடு நிலச்சரிவு பகுதியை மத்திய … Read more

மத்தியப் பிரதேசத்தில் மத நிகழ்வில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: 9 குழந்தைகள் பலி

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் மத நிகழ்வில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக சாகர் பகுதி காவல் ஆணையர் வீரேந்திரா சிங் ராவத் கூறுகையில், “எங்களுக்குக் கிடைத்த தவலின்படி சாகர் மாவட்டம் ஷாபூரில் நடந்த ஹர்தல் பாபா மத நிகழ்வின்போது நிகழ்ச்சி நடந்த அரங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை 9 குழந்தைகள் உயிரிழந்ததும் … Read more

காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 8-ம் தேதி முதல் ஆணையர்கள் ஆய்வு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல மைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது அங்கு சட்டப் பேரவை இல்லாததால், யூனியன் பிரதேசங் கள் துணைநிலை ஆளுநர் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் வரும் 8-ம் தேதி … Read more

இறந்தவர் பாஜக ஆதரவாளர் என்பதால் இறுதிச்சடங்கு செய்ய மறுத்த இமாம் மீது வழக்கு

புதுடெல்லி: இறந்தவர் பாஜக ஆதரவாளர் என்பதால் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய மறுத்த இமாம் மீது உத்தரபிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உ.பி.யின் முராதாபாத்தை சேர்ந்தவர் தில்நவாஸ் கான். பாஜக ஆதரவாளரான இவர் கடந்த ஜூலை 23-ம் தேதி மாரடைப்பால் இறந்தார். இதுபோல் இறந்த முஸ்லிம்களின் அடக்கத்திற்கு முன் அவரது உடலை தரையில் கிடத்தி, இறுதித் தொழுகை நடத்துவது வழக்கம். இது, அடக்கஸ்தலத்தில் அல்லது அருகிலுள்ள மசூதி வளாகத்தில் நடைபெறும். இந்த இறுதித் தொழுகையை … Read more

காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய 6 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது. போலீஸார் உட்பட 6 அரசு ஊழியர்கள், போதைப்பொருள் விற்பனை மூலம் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது கண்டறியப்பட்டது. அவர்களை அரசியலமைப்பு சட்டத்தின் 311(2)(சி) பிரிவை பயன்படுத்தி துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பணிநீக்கம் செய்துள்ளார். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களால் நடத்தப்படும் போதைப்பொருள்- தீவிரவாத நெட்வொர்க்கில் இடம் பெற்றிருப்பது தெரியவந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்தை … Read more