தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகிறது..!!

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற்றன. பொதுத்தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி … Read more

கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் கைது – மகளிர் ஆணையத்தில் கல்லூரி நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கம்

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். அவரை ஏப்.13 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குபேராசிரியர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் ஹரி பத்மன்,உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், நாத்ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more

கலாஷேத்ரா இயக்குநரிடம் மகளிர் ஆணையத் தலைவர் விசாரணை; 3 பேருக்கு அனுமதி இல்லை

கலாஷேத்ரா இயக்குநரிடம் மகளிர் ஆணையத் தலைவர் விசாரணை; 3 பேருக்கு அனுமதி இல்லை Source link

"அனுபவமும், தூய மனமும்".. அஜித்குமாரை புகழ்ந்து தள்ளிய மாஜி அமைச்சர்..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்ததை அடுத்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று அவருடைய தந்தைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜித்குமார் வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவருடன் பேசியுள்ளனர். நடிகர் அஜித்குமாருக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்பதால் அவருடன் அரசியல் குறித்து பேசி இருக்க வாய்ப்பு இல்லை … Read more

தமிழகம் முழுவதும் மே 9-ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்..!!

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை பொருத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ.தூரத்துக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.5, இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு மீட்டர் வழங்காத காரணத்தால் இந்தகட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. மேலும் அந்த சமயத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ.60,டீசல் ரூ.45 என்ற … Read more

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 4-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ கிளினிக்: கிராம மக்கள் மகிழ்ச்சி

கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ கிளினிக்: கிராம மக்கள் மகிழ்ச்சி Source link

துணி காயவைத்தபோது மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் வரதாபுரம் ராமர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் (45). கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மனைவி கீர்த்தனா (30). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் கீர்த்தனா, நேற்று முன்தினம் மாலை வீட்டில் துணி துவைத்து விட்டு துணியை காய வைப்பதற்காக சுவர் ஓரம் இருந்த கேபிள் டிவி ஒயரை ஈரக்கையுடன் பிடித்துள்ளார். அப்போது அதிலிருந்து கம்பி மூலம் கீர்த்தனாவின் உடலில் மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார். இதைக் … Read more

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட வரைவை முன்மொழிந்திடுக: சீமான்

சென்னை: “தமிழகத்தில் வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படும் கொடுமைகளைத் தடுத்திடும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றியுள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் ‘வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம்’ இயற்ற நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்ட வரைவு முன்மொழியப்பட வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. முன்னெப்போதும் … Read more