தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த அனுமதி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மறியலில் ஈடுப்பட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

நிற்காமல் சென்ற காரை துரத்திப் பிடித்த போலீசார்: சோதனையில் சிக்கிய 100 கிலோ கஞ்சா

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்; மூன்று பேரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை போலீசார் முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் இளைஞர்கள் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல்..!

நியூசிலாந்து அணியுடனான தொடரை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர், நியூசிலாந்து … Read more

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில், ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் … Read more

ஈரோடு கிழக்கு – அதிமுக Vs பாஜக : நள்ளிரவில் நடந்த மாற்றம்- போருக்கு தயாரான எடப்பாடி

அதிமுக கூட்டணியில் ஆரம்பம் முதலே நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்சினை தற்போது கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. இதில் யார் குளிர் காயப் போகிறார்கள் என்பது தான் இப்போது அரசியல் அரங்கில் அதிகம் உலா வரும் கேள்வி. கூட்டணியில் பிளவு!அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக கூட்டணியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களை சந்தித்தனர். கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக இவ்வாறு தனித்தனியாக சந்தித்த நிலையில் இது தற்போது வளர்ந்து கூட்டணியிலும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. … Read more

உஷாரா இருங்க…பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் முதற்கட்டமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது கடல் பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  மேலும் வங்க கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது, மேலும் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் இன்று பலத்த … Read more

கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(02-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(02-02-2023) சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

மதுரை: இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தலைமைக் காவலர் உட்பட 6 பேர் கைது

மதுரையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் தலைமைக் காவலர் ஒருவரே கூலிப்படையை ஏவி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலையழகுபுரம் 1-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். நகை கடையை நடத்திவரும் இவர், இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் சோலையழகுபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம கும்பல் … Read more