தஞ்சாவூர் : கார் மரத்தில் மோதி விபத்து – 5 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கார் மரத்தில் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் வைத்தியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (39). இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். இதையடுத்து அங்கு தரிசனம் செய்துவிட்டு காரில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் அருகே திருவையாறு-கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. … Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் எந்த கடையிலும் வாங்கலாம்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை முதல் கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் பொருட்களை, கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டும் வாங்க முடியும். இதனால், இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து, கார்டுதாரர்கள் எந்த இடத்திலும் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வசதி துவக்கப்பட்டது. பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு … Read more

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை – திரிகோணமலையில் இருந்து சுமார் 340 கிலோ மீட்டர் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்பதால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. … Read more

“கடலுக்குள் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைத்தால்…” – கருத்துக் கேட்புக் கூட்டத்திற்குப் பின் சீமான் எச்சரிக்கை

சென்னை: “கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால், கடலுக்குள் வைக்கக்கூடாது. அவ்வாறு வைப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக ஓர் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் … Read more

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க மீண்டும் கால அவகாசம்!

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது ஏற்கனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு மின் நுகர்வோர்களின் தொலைபேசி எண்களை மின் இணைப்புடன் இணைத்துள்ளது. அதன்தொடர்ச்சியாக, தற்பொழுது வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளை பெற்றிருக்கும் மின் நுகர்வோர்கள் பற்றிய விவரங்களை புதுப்பிக்கும் பொருட்டு அவர்களது … Read more

பழனி முருகன் கோவில் கருவறையை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தினால் பக்தர்கள் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தை பூச திருவிழா தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இந்நிலையில் பழனி கோவில் கருவறையை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து‌ தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் பழனி … Read more

துணி துவைக்க சென்றபோது பரிதாபம் வால்பாறையில் ஆற்றில் மூழ்கி தாய், மகன் பலி

வால்பாறை : வால்பாறையில் துணி துவைக்க சென்ற தாயும், மகனும் நீரில் மூழ்கி பலியானார்கள்.கோவை மாவட்டம் வால்பாறை அடுத்து சேடம் டேம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திருச்செல்வி (33). இவர்களது மகன் சஜித் (7), மகள் தீபிகா (4). மகன் சோலையார் அணை பகுதியில் உள்ள  தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். மகள் எல்கேஜி படித்து வருகிறார். திருச்செல்வி நேற்று வீட்டில் துணி துவைத்தார். அவருக்கு மகன் உதவி … Read more

பி.ஏ.பி பாசனத் திட்டம்: மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது.. விவசாய சங்கத்தினர் கோரிக்கை

பி.ஏ.பி பாசனத் திட்டம்: மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது.. விவசாய சங்கத்தினர் கோரிக்கை Source link

வள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா..? பேனா சிலை கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு…!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரை பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பின் தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கருத்துக்கேற்ப கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.  இந்த கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி … Read more

ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை.. அமைச்சர் அன்பில் சொன்ன முக்கிய தகவல்..!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; “கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு … Read more