அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாயகன் விஜய்! அவனியாபுரம் அசத்தல் ஆட்டம்!

ஜல்லிக்கட்டு போட்டிகளிகள் 4 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு ரூ. 7லட்சம் மதிப்புள்ள நிசான் மேக்னைட் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த காலை 8 மணிக்கு தொடங்கி 11 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதில், 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் … Read more

இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!!

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 42 ரன்களில் வெளியேற, அதிரடியாக ரன்களை சேர்த்த சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார். ஷ்ரேயாஸ் அய்யர் 38 ரன்களும், கே.எல்.ராகுல் 7 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 4 … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு |  மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கிய போட்டி

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) தொடங்கியது. போட்டி துவங்கும் முன் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடக்கிறது.பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் வரும் 17-ம் தேதியும் நடக்க இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒவ்வொரு … Read more

பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி..!!

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து தரப்பட்ட மக்களும் சாதி மத பேதமின்றி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோலப்போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை … Read more

மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலைக் கொண்டாடுவதற்கு சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் காவல் ஆளிநர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் நான்கு தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்கப்பட உள்ளது. … Read more

காணும் பொங்கல் விழா | சென்னையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

சென்னை: பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ”17.01.2023 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருதால், எவ்வித அசாம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் … Read more

ஜல்லிக்கட்டில் ஹாட்ரிக் வெற்றி; முதல்வர் ஸ்டாலின் கார் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து, நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. அரசு தரப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனை குழுவும் இணைந்து இந்த போட்டிகளை நடத்தினர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க 1004 காளைகளும், 318 மாடுபிடி வீரர்களும் தேர்வு … Read more

நான்கு நாட்களில் கல்லா கட்டிய ஆம்னி பேருந்துகள்… தமிழகத்தில் மட்டும் 2.15 லட்சம் பேர் பயணம்…!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். பொதுமக்கள் எளிதில் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. அதேபோன்று ஆமினி  பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 58 பேருக்கு காயம்!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 58 பேர் காயமடைந்த நிலையில், 14 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. போட்டியில் பங்கேற்பதற்காக 300 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 280 பேர் பங்கேற்றனர். இதில் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 260 பேர் போட்டியில் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 25 பேர் என 11 சுற்றுகள் நடைபெற்றது. போட்டி துவங்குவதற்கு முன்பாகவே காளை மாடுகளுடன் … Read more