பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர், சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். செம்மிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், திருச்சி – கோவை நெடுஞ்சாலை நோக்கி சென்றது. அப்போது, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து, செம்மிபளையம் பிரிவு அருகே, சாலையை கடந்த தனியார் நிறுவன பேருந்து மீது மோதி … Read more

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட இளம் வீராங்கனை உயிரிழப்பு – தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம்

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்தார். கவனக்குறைவாக செயல்பட்ட 2 அரசு மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னை வியாசர்பாடியில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரவிக்குமார் – உஷாராணி … Read more

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 27ம் தேதி கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிச.6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் … Read more

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துதான் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துதான் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் Source link

நாளை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நாளை (நவம்பர் 16ம் தேதி) நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட … Read more

காருக்கு போட்ட பெட்ரோல் தண்ணீராக இருந்ததால் கால்டாக்ஸி டிரைவர் அதிர்ச்சி..!

கோயம்புத்தூரில் காருக்கு போட்ட பெட்ரோலுக்கு பதில் தண்ணீர் இருந்ததால் கால் டாக்ஸி டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சீத்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ரமேஷ் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். சிறிது தூரம் சென்றபின் கார் நின்றுவிட்டதால், மெக்கானிக்கை அழைத்து காரை பரிசோதனை செய்ததில் பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர் இருந்துள்ளது. உடனே பெட்ரோல் பங்கிற்கு சென்று கேட்டபோது, அங்கிருந்தவர்கள் சரியான பதிலை சொல்லவில்லை எனக் … Read more

விருதுநகரில் அனுமதியின்றி நிறுவப்பட்ட இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: அம்மச்சியாபுரத்தில் 126 வீடுகள் உள்ளன. அனைவரும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர். இதனால் அம்மச்சியாபுரத்தில் இமானுவேல் சேகரன் வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி ஆகஸ்ட் 29-ல் மனு அனுப்பினோம். செப். 10-ல் சிலை நிறுவப்பட்டது. ஆனால், முறையாக அனுமதி … Read more

காட்பாடியில் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாமில் திரண்ட 9 மாவட்ட இளைஞர்கள்: சான்றிதழ் இல்லாதவர்கள் ஏமாற்றம்

வேலூர்: காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதில் 9 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். உரிய சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை ராணுவத்திற்கு அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் அக்னிவீர்(ஆண்), அக்னிவீர்(பெண் ராணுவ காவல் பணி), சிப்பாய் தொழில்நுட்பம் உதவி செவிலியர், உதவி செவிலியர்(கால்நடை) … Read more

காதலியிடம் பேசியதால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.! சிசிடிவியில் சிக்கி கொண்ட காதலன்.!

சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரத்தில், சுந்தரம் நகர் 6-வது தெருவை சேர்ந்த ராஜேஷ் புளியந்தோப்பில் உள்ள ஆடு தொட்டியில் ஆடு மற்றும் மாடுகளை பராமரிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆடு தொட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மினிவேன் ஒன்றில் படுத்து உறங்கினார். அப்போது அந்த பகுதிக்கு வந்த ராஜேஷ் மீது மர்மநபர் ஒருவர் தீ வைத்து விட்டு தப்பி ஓடினார்.  இந்த தீ விபத்தில், பற்றி எறிந்த இவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, … Read more