ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன உள்ளது?
அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் கோரியதை அடுத்து … Read more