ஒரு குழந்தைகூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: ஒரு குழந்தைகூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவ.19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம். குழந்தைகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை. எந்தக் குழந்தையும் … Read more

தம்மாத்துண்டு செடி பாஜக.. கிழி கிழினு கிழித்த சீமான்.. அண்ணாமலை அப்செட்

செய்தியார்களை சந்தித்த சவுக்கு சங்கர் ஜாமீன் மற்றும் பாஜகவை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக உயர்ந்துள்ளதாக அக்கட்சி கருதுகிறதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், பாஜக அப்படி சொல்லிக்க வேண்டியதுதான். அப்படி பெருமை பேசும் பாஜக வரும் 2024 தேர்தலில் அல்லது அதிமுகவின் முதுகு பின்னாடி நின்று போட்டியிடப்போகிறது. நீங்கள் ஏன் வளரும் கட்சி என்று சொல்கிறீர்கள். என்னை பொறுத்தவரையில் பாஜக எனது மரத்தின் நிழலில் வளரும் குட்டை செடி, … Read more

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!

திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவில் வசித்து வருபவர் சிவாரெட்டி(27). இவரது மனைவி லலிதா (22). ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டுகள் ஆகிறது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள INS அடையார் கடற்படை தளத்தில் சிவாரெட்டி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தனது 8 மாத கர்ப்பிணியான மனைவி லலிதாவுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் கடற்கரையில் இருந்துவிட்டு இரவு 8.30.மணியளவில் இருவரும் பைக்கில் புறப்பட்டு வீட்டிற்கு சென்ற போது, காமராஜர் சாலை மாநிலக்கல்லூரி … Read more

பசுமை நடை, சைக்கிள் பயிற்சி பாதை, படகு உணவகம்; சுற்றுலா மையமாகிறது புத்தேரி பெரிய குளம்: ரூ.4 கோடியில் திட்டம்; கலெக்டர்,ஆணையர் ஆய்வு

நாகர்கோவில்: ரூ.4 கோடியில் படகு உணவகம், அலங்கார பசுமை நடை பாதைகள், சைக்கிள் பயிற்சி பாதைகளுடன், புத்தேரி பெரிய குளம் சுற்றுலா மையமாக உருவாக்கப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி மிகவும் குறுகலான நெருக்கடியான நகரம் என்பதால், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள போதுமான இடம் இல்லை. அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டாலும், அங்கும் அடிக்கடி பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை.  பொதுமக்கள் பொழுது போக்க வேண்டும் என்றால், வேப்பமூடு சர்.சி.பி. ராமசாமி ஐயர் … Read more

கிருஷ்ணகிரி: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து – பெண் உட்பட இருவர் பலி

அஞ்செட்டி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆறு ஆண்கள் ஒரு பெண் உட்பட 7 பேர்; காரில் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வந்தபோது, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து உருண்டு மரத்தில் மீது பலமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் சென்ற ஒரு ஆண் சம்பவ இடத்திலேயே … Read more

குன்னூர் ராணுவ வெடி மருந்து ஆலையில் விபத்து! 2 ஊழியர்கள் படுகாயம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியில் உள்ள ராணுவ வெடி மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்க வருகிறது. இந்த ஆலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் தயார் செய்யப்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று அதிகாலை தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதியில் எட்டு பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. … Read more

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்.. 25ம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம்..!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒருவார காலம் கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் நவம்பர் 25-ம் தேதி வரை கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கி தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது. … Read more

நண்பர்களிடம் கார் இரவல் வாங்கிச் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பலே திருடர்கள்.. கைது செய்த காவல்துறை..!

காரைக்குடி அருகே நண்பர்களிடம் கார் இரவல் வாங்கி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். வேலங்குடி பைபாஸ் சாலையில் வசித்து வரும் செல்வகணபதி என்பவர் தனது வீட்டில் 2 லட்ச ரூபாய் பணம்  கொள்ளை போனது குறித்து போலீசில் புகார் அளித்திருந்தார். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் அக்கம்பக்கம் நோட்டமிட்டு வீடு புகுந்து திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கொக்கி குமார் என்பவருக்கு சொந்தமான காரை அவரது நண்பரான பானா … Read more

கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கனமழையும், நவம்பர் 21 மற்றும் நவ.22 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், … Read more