தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து 18 மாணவர்கள் படுகாயம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 40 மாணவர்களுடன் தனியார் பள்ளி பஸ்சை நீலமங்கலத்தை சேர்ந்த கணேசன்(58) நேற்று மாலை ஓட்டி சென்றார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, மினி டெம்போ மோதுவதுபோல் சென்றதால் பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக செண்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது. உள்ளே இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திரண்டு பஸ் கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை வெளியேற்றினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்பி பகலவன் வந்து … Read more