சென்னை: திமுக பொதுக்குழுவில் தன் நிலை குறித்து தெரிவித்து, நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் அமைப்பு ரீதியான தேர்தல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம், பொதுக்குழு கூடியது. இதில், திமுக தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கூட்டத்தில் வாழ்த்துரைகள், ஏற்புரைகளுக்குப்பின், நிறைவாகப் பேச வந்தார் ஸ்டாலின். பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரை மதிப்புக்குரியவர்கள் என்று உயர்த்திய அவர் பேச்சு ஒரு கட்டத்தில் மாறியது. … Read more