குழந்தையும் போயிட்டா.. அவரும் போயிட்டார்.. நிர்கதியாய் தவிக்கும் தாய்..! ஒரு ஊதாரி இளைஞரால் விபரீதம்

தனது மகள் ரெயிலுக்குள் தள்ளி கொலை செய்யப்பட்டது முதல் தனது கணவர் உயிரிழந்தது வரை எதுவும் தெரியாமல் மார்பக புற்று நோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பெண் தலைமை காவலர், உண்மை தெரிந்து காவல் ஆணையரை கண்டு கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவி சத்யஸ்ரீ ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்டார். ரயில் ஏறியதில் தலை துண்டான தனது மகளின் உடலை பார்த்த அதிர்ச்சியில் … Read more

பெரியாறு தண்ணீரை எடுப்பதில் விதிமீறலா? – பி.ஆர்.பாண்டியன் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மோதல்

மதுரை: பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. தேனி மாவட்டம் சின்னமனூரின் கிழக்குப் பகுதி மேட்டுப்பாங்கான பகுதி என்பதால் ஆறு, கால்வாய் மூலம் பாசன வசதி பெற முடியாத நிலை இருந்தது. இதனால் முத்துலாபுரம், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, அப்பிபட்டி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, சீப்பாலக்கோட்டை, சுக்காங்கல்பட்டி உள்ளிட்ட கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் ஒருங்கிணைந்து குழாய்கள் பதித்து வைகை அணைக்குச் செல்லும் … Read more

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனை: ஆயுள் தண்டனை கைதி அறையில் செல்போன், சிம்கார்டு பறிமுதல்..!!

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி இருந்த அறையில் செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுள் தண்டனை கைதி செல்வம் அறையில் சோதனையிட்டபோது செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

“தமிழ், திராவிடத்தை ஆளவும் வைக்கிறது; தமிழர்களை வாழவும் வைக்கிறது!”-அன்பில் மகேஷ் பேச்சு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பொன்றில், “இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் தாய்மொழியாம் தமிழ் தான்” என்று பேசியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் கால்நடை சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தஞ்சை பூதலூர் செல்லப்பன்பேட்டையில் சிறப்பு கால்நடை சுகாதார & விழிப்புணர்வு முகாம் நிகழ்வினை துவக்கி … Read more

கருணை இல்லம் என்ற பெயரில் முதியோர்களை அடித்து துன்புறுத்தல் – மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!

வேலூர் மாவட்டம் குகையநல்லூர் பகுதியில் ஆதரவற்ற முதியோர்களுக்காக புனித ஜோசப் கருணை எல்லாம் இயங்கி வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் புகார்கள் எழுந்து வந்தஸநிலையில் 2018 ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் முதியோர்களை அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் … Read more

‘சத்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதால் ரயில் முன் தள்ளினேன்’ – கைதான இளைஞர் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ‘‘எனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக ரயில்முன்பு தள்ளி கொலை செய்தேன்’’ என்று கைதான சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை இளைஞர் சதீஷ் நேற்று முன்தினம் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, துரைப்பாக்கத்தில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த சதீஷை நேற்று காலை கைது செய்தனர். 15 நாள்நீதிமன்றக் காவலில் அவர் … Read more

எடப்பாடிக்கு வைத்த குறி: சிக்கிய காண்ட்ராக்டர் – அடுத்து நடக்கப் போவது என்ன?

ஆட்சியில் டெண்டர்களை எடுத்த காண்ட்ராக்டர்கள் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனையில் சிக்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் சிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் வரும் வருமான வரித்துறை அதிமுக ஆட்சியில் பலன் பெற்ற ஒப்பந்ததாரர்களை குறிவைத்து சோதனைகளை நடத்தி வருகிறது. வடவள்ளி சந்திரசேகர், செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் ஜூலை மாதம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் இருந்தது கண்டறியப்பட்டதாக … Read more

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கனஅடியில் இருந்து 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 78,500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.