“இது இந்தியா தான், `ஹிந்தி'யா அல்ல” – அமித் ஷா பேச்சுக்கு ஸ்டாலின் பதில்

சென்னை: `இந்தி திவாஸ்’ தினத்தையொட்டி குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள அலுவல் மொழியான இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கலாச்சாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மொழிகளை பேசும் மக்களை கொண்ட இந்திய ஒன்றியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டுக்கு … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் அவசர சட்டம்: சட்ட அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார். 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, … Read more

அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ்ஸுக்கு தடையில்லை – வழக்கறிஞர் திருமாறன் பேட்டி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பி.எஸ் தரப்பிற்கு எந்த தடையும் இல்லை என்று ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் பேட்டியளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகம் வெளியே ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டியது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் … Read more

சென்னை பள்ளியில் மத மாற்றமா? குழந்தைகள் ஆணையம் – சிறுபான்மையினர் ஆணையம் முரண்பாடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மத மாற்றம் குறித்த புகார்கள் எழுந்த நிலையில், அப்பள்ளியில் விசாரணை நடத்திய மாநில குழந்தைகள் ஆணையமும் சிறுபான்மையினர் நல ஆணையமும் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மீது விதி மீறல்கள் தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், மாநில சிறுபான்மையினர் நல் ஆணையத்தினர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த வாரம் … Read more

உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் உயிர் – உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு..!

உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த வேண்டும் என்றல் இந்திய மக்கள் தங்கள் தாய்மொழியைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தி மொழி தினவிழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உரையாற்றினார்.  அப்போது உரையாற்றிய அவர், “இந்தி அனைத்து இந்திய மொழிகளின் நண்பன் என்றும், அது ஒட்டுமொத்த தேசத்தை ஒரு அலுவல் மொழியாக ஒன்றிணைப்பதாகவும்” தெரிவித்தார்.  மேலும், தொடர்ந்து பேசிய அவர், “உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் உயிர். நமது … Read more

இபிஎஸ்ஸுக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் மேல்நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாக கூறி 2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: நேரில் ஆஜரான மகாலிங்கம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டினர். அப்போது ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்த போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்தக் கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினர் இடையே தனித்தனி புகார்களின் அடிப்படையில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளும் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. … Read more

பொறுத்திருந்து பாருங்கள்! – அதிமுக அலுவலகம் செல்வது குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்

எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடும் என அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பிறகு பேட்டியளித்துள்ளார். சென்னை அசோக் நகர் அதிமுகவின் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதா, … Read more

இந்துக்களை வெளியேற்றும் வக்பு போர்டு சிஇஓ.! சஸ்பெண்ட் செய்து கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்.!

இந்துக்களை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்பு போர்டு சிஇஓ ரபியுல்லாவை சஸ்பெண்ட் செய்வதுடன் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தையடுத்த திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், அரசங்குடி, கும்பக்குடி, கடியாக்குறிச்சி, கிளியூர், திருச்செந்துறை, கோமாகுடி உள்ளிட்ட 22 கிராமங்கள் மற்றும் திருச்சி … Read more

100 நாள் வேலை பணி ஆணைகள் வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 100 நாள் வேலைக்கான பணி ஆணைகளை வழங்க ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், கூடுதல் அதிகாரம் வேண்டும், 100 நாள் வேலைக்கான பணி ஆணைகளை வழங்க அதிகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளது. ஜனநாயகத்தின் … Read more