உணவகத்துக்குள் புகுந்த அரசு பேருந்து.. இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்..!

ஹோட்டலுக்குள் அரசு பேருந்து உகுந்தததகல் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நத்தத்தில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி புளிக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஹோட்டலுக்குள் மோதியது. ஹோட்டலில் விநாயகர் ஊர்வலம் பார்க்க நின்ற பொதுமக்கள் மீது பேருந்து மோதியது. இதில தேவராஜ், பாண்டி என்ற இரண்டு முதியவர்கள் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், … Read more

ரம்மி விளம்பரத்தில் நடித்தது ஏன்? – நடிகர் சரத்குமார் கருத்து

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும்நடிகருமான சரத்குமார் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: ஆன்லைன் ரம்மி தவறு என்றால் அரசு தடை செய்யட்டும். அரசு தடை செய்தால், ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டி வருகிறது? குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும் என்பதால், குடிக்காமல் இருக்கிறார்களா? புகைப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு எனும்போது, தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை? அதுபோல, இணையத்தில் நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள். நாம் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தால், அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள். அதை விட்டுவிட்டு, நான் ரம்மி விளம்பரத்தில் … Read more

திருப்பத்தூர்: பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிறந்து 40 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ரித்திகா என்ற 7 வயது மகளும், பிறந்து 40 நாட்களே ஆன மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்ததால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த … Read more

கோவையில் 56 கிராம ஊராட்சிகளில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம்

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 56 கிராம ஊராட்சிகளில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் கீழ்வரும் 56 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட … Read more

மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

மதுரை: மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராஜபாளையம் – சங்கரன்கோவில் இடையே ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை முழுமையாக ரத்து … Read more

மாணவிகளுக்கு மாதந்தோறும் பணம்… புதுமைப் பெண் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர்

உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. புதுமைப் பெண் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக … Read more

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை: உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.410 கோடி செலவில் 9 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுர ஒருங்கிணைந்த கீழமை நீதிமன்றங்களுக்கான கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பழைய சட்டக் கல்லூரி வளாகத்தை புனரமைக்கும் பணியின் தொடக்க விழா, … Read more

அரக்கோணம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த சென்னை பெண்கள் 3 பேர் பலி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த சென்னையை சேர்ந்த 3 பெண்கள் மூழ்கி பலியாகினர்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் ஜியா உல்ஹக்(45). இவர் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினருக்கு கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதிக்கு விருந்து அளிக்க வீட்டிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து புதுமண தம்பதி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த உறவினர்கள் தக்கோலத்திற்கு நேற்று வந்தனர். மதியம் விருந்து முடிந்ததும் மாலையில் … Read more

விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்: நத்தம் அருகே நடந்த சோகம்!

நத்தம் கோவில்பட்டியில் ஹோட்டலுக்குள் புகுந்த அரசுப் பேருந்தால், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து- மதுரைக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (செப்.,04) இரவு நத்தத்தில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசுப் பேருந்து நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி புளிக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஹோட்டலுக்குள் பேருந்து புகுந்தது. அங்கு விநாயகர் ஊர்வலம் பார்க்க வந்த … Read more