கனரா வங்கி வாடிக்கையாளர் பெயர்களில் பல லட்சம் மோசடி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன்குறிச்சி பகுதியை  சேர்ந்தவர் சீதாலட்சுமி. கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று சீதாலட்சுமிக்கு  ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கனரா வங்கியில் இருந்து 75 ஆயிரம் லோன்  கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்தது. இதையடுத்து சீதாலட்சுமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராசிபுரம் அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கனரா  வங்கிக்கு சென்று மேலாளரிடம் நோட்டிஸ் குறித்து கேட்டுள்ளனர். முறையாக பதில் அளிக்காததால் வாக்கு வாதம் ஏற்பட்டது.  பின்னர்  சம்பவத்தையடுத்து … Read more

திருமணம் செய்வதாக கூறி வரவழைத்து இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்கார முயற்சி: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்வதாக கூறி நேரில் வரவழைத்து காரில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்ய முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சையை சேர்ந்த விவாகரத்தான 28 வயது பெண் ஒருவர், மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்து இருந்தார். அதே திருமண தகவல் மையத்தில் கும்பகோணத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் பதிவு செய்து இருந்தார். இவர் இணையதளத்தில் தனக்கு தகுந்த வரன் இருக்கிறதா? என பார்த்தார். … Read more

2028-க்குள் புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் வளர்ச்சி தேக்கமடையும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: “2028-ம் ஆண்டிற்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லையெனில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கமடையும். மேலும், விமானப் போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பயணிகள் போக்குவரத்தின் ஆண்டு வளர்ச்சி … Read more

பரந்தூர் விமான நிலையம்: சந்தை விலையை விட கூடுதல் விலை – அமைச்சர் உறுதி!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததான பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு, விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கும் சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. “சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பயணிகள் போக்குவரத்தின் தற்போதைய ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) (2009-2019 காலத்தில்), சராசரியாக … Read more

எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது – செ. உயர்நீதிமன்றம்

போராட்டங்களில் தங்களுக்கான நியாயங்களையும், கோபத்தையும் மக்கள் பலவிதங்களில் வெளிப்படுத்துவது உண்டு. சமீபத்தில் கூட கேரளாவில் குண்டும் குழியுமாக கிடந்த சாலையை சீரமைக்க பலமுறை மனு அளித்தும் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ வரும் நேரம்பார்த்து குண்டும் குழியுமாக கிடந்த அந்த சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவித்தார்.  போராட்டங்களின் கோரிக்கைகளை நூதனமாக தெரிவிக்க எத்தனையோ முறைகளை மக்கள் கையாண்டு வரும் நிலையில், விழுப்புரத்தில் எருமை மாட்டிடம் கோரிக்கை … Read more

சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

ஊட்டி,: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த வாரம் தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிவரும் கூலி தொழிலாளியின் மகளை (4) சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று அரக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. நேற்று இரவு உணவு தேடிவந்த அந்த சிறுத்தை கூண்டிற்குள் சிக்கியது. கூண்டிற்குள் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறை … Read more

அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஒப்புதல் இல்லாமலும் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் செயல்பட்டு வந்த சாய் விஹார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஒப்புதலும் இல்லாமலும் செயல்பட்டு வருவதாக கூறி, பள்ளியை மூன்று நாட்களில் மூடும்படியும், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் சேலத்தில் உள்ள வட்டார கல்வி அதிகாரி, ஆகஸ்ட் 2ம் … Read more

‘செம’ கேட்ச்… கூடவே பிரமாண்ட சாதனை… கலக்கும் இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 89.1 ஆவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து … Read more

மின்கசிவால் பற்றி எரிந்த வீடு.. உடல் கரகி பலியான் இளைஞர்..!

கோயம்புத்தூர் மாவட்டம், கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் இரண்டு சிமெண்ட் சீட்டால் ஆன வீடு ஒன்றை அமைத்து வாழ்ந்து வருகிறார்.  சம்பவதன்று இவரது இரண்டாவது மகனை தாய் வீட்டில் விட்டுள்ளார். மேலும், ஒரு வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கி கொண்டிருக்கவே அருகே சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, மேற்கூரை , இரும்பு தகடால் அமைக்கப்பட்டு இருந்த மற்றொரு வீட்டில் அர்ஜூன் தூங்கியுள்ளார். அப்போது , எதிர்பாராத … Read more

எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்தை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், “திருவண்ணைநல்லூர் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனர்.இதை தடுக்க வேண்டும், அவர்களுக்கு பட்டா வழங்க … Read more