கோவை: பெரும் தொல்லையாக மாறிய நாய்கள்… 6 மாதங்களில் 4,400 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை

கோவை மாநகர் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும், நாய் கடிக்கு 4,400-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். கோவையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவுநேரம் பணி முடிந்து வரும் பொதுமக்களுக்கு மிகுந்த தொந்தரவை தருகின்றது. வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி செல்வதால், பதட்டத்தில் நிலை தடுமாறி வாகனங்களில் இருந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக உக்கடம் புல்லுக்காடு, G M நகர், கரும்புக்கடை, பீளமேடு போன்ற பல்வேறு இடங்களில் பிரச்னை தொடர்கதையாக … Read more

கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த ஸ்டாண்டிங் கமிட்டி: ‘டி.ஆர் பாலு எம்.பி.வராதது ஏமாற்றம்’ – வானதி சீனிவாசன்

Coimbatore News in Tamil: கோவை ரயில் நிலையத்தை ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி சார்பில் 16 எம்பிக்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அதன்பிறகான பேட்டியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘இந்த ஆய்வில் டி.ஆர் பாலு எம்.பி.வராதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். கோவை ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வே கமிட்டி சேர்மன் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி-கள் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு … Read more

கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பாலில் கலக்கப்பட்ட யூரியா.! பறிமுதல் செய்த அதிகாரிகள்.!

திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்ட பாலில் யூரியா கலப்படம் இருந்ததால் 12 ஆயிரத்து 750 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தனியாருக்கு உரிமையான அகிலா ட்ரான்ஸ்போர்ட் டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பால் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டது.  அப்போது, அந்த பாலில் யூரியா கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த லாரியில் இருந்த 12 ஆயிரத்து 750 லிட்டர் பாலை … Read more

ஆசிரியை தாக்கியதால் 2ஆம் வகுப்பு மாணவனுக்கு தலையில் வீக்கம்.. பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை..!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கியதால் மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கட்ராமன் – சாந்தி தம்பதியின் 7 வயது மகனை, பள்ளியில் ஆசிரியை ஒருவர் கம்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. சிறுவனின் தலையில் வீக்கம் இருப்பதைக் கண்டு பெற்றோர் பள்ளிக்குச் சென்று கேட்ட போது, முறையாக பதில் அளிக்காத பள்ளி நிர்வாகம் டி.சி வாங்கிக் கொண்டு செல்லுமாறு கூறியதாக … Read more

திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு புதிய கட்டிடம்: மா.சுப்பிரமணியன் உறுதி

மதுரை; ‘‘மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு 2 ஆண்டுகளில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது’’ என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார். மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியாபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பழம் பெருமை வாய்ந்த மருத்துவக் கல்லூரியாகும். 1975-ஆம் … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்கள்: ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் தகவல்!

முன்னாள் முதல்வர் , நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016 – 2021ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் … Read more

ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும்: செய்தியாளர் சந்திப்பில் சையது கான் அதிரடி

தேனி: அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமியை, ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும், இனிமேலும் அவர் பணத்தாசை பிடித்த எடப்பாடி பழனிச்சாமியை பொருட்படுத்தக்கூடாது என்று செய்தியாளர்களிடம் பேசிய சையது கான் தெரிவித்தார். பதவி ஆசையால், சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று விழுந்து முதல்வர் பதவியை பெற்று ஓபிஎஸ்ஸுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று அவரை கடுமையாக சாடினார். செங்கோட்டையன் தான் முதன் முதலில் சசிகலாவினால் அதிமுக சார்பில் முதல்வராக … Read more

இன்டர்நெட் மூலம் தோழிகளை விலை பேசிய கல்லூரி மாணவி

திருப்பூர்: சிறுவர்கள் முதல் பல்லுபோன பாட்டிவரை அனைவரிடமும் இப்போது ஸ்மார்ட் போன் வைத்திருப்பது ஒரு பேஷனாகிவிட்டது. ஒருவரிடம் ‘ஸ்மார்ட் போன்’ இல்லை என்பது இன்றைய நிலையில் மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் ‘ஸ்மார்ட் போன்’ பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஆனால் இந்த போன்களை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்பவர்கள் மிக சொற்ப அளவிலேயே உள்ளனர். ஆக்க சக்தியாக பயன்படுத்தப்பட வேண்டிய விஞ்ஞான வளர்ச்சியை அழிவு சக்தியாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. … Read more

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு – முக்கிய ஆவணங்கள் மாயம்; ஓய்வு வழக்கறிஞர் விளக்கம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல்போனது நீதிபதியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிறப்பு டிஜிபியாக இருந்தவர், கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ்அப் மெசேஜ் பதிவு, கால் … Read more

மின்னல் தாக்கி பலியான மாணவர்.. ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சோகம்..!

மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவிலில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பல மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் தாழையடி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் கஜினி படித்து வருகிறார். சம்பவதன்று, அவர் பள்ளி முன் விளையாடி கொண்டிருந்த போதுபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. படுகாயமடைந்த அவரை மீட்ட ஆசிரியர்கள் … Read more