#தமிழகம் | சாதிமறுப்பு திருமணம் – வீடு புகுந்து ரகளையில் ஈடுபடும் தமிழக போலீஸ் டிஎஸ்பி.! பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் புகார்.!

திருநெல்வேலி : சங்கரன் திருடு பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்பவரின் வீட்டை, எஸ்பி ராமகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் ஜின்குமார் தலைமையிலான போலீசார் சூறையாடி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சேரன்மகாதேவி காவல்துறை டிஎஸ்பி மீது, டிஜிபி அலுவலகத்தில் புகார் முப்புடாதி மனைவி கொடுத்துள்ளார். அவரின் அந்த புகார் மனுவில், “நான் எனது கணவர் மற்றும் குழந்தையுடன் குடியிருந்து வருகிறேன். எனது கணவர் விவாசாய கூலி வேலை செய்து வருகிறார். எனக்கும் எனது கணவருக்கும் கடந்த ஒன்றரை … Read more

தெற்கு ரயில்வேயில் 78.5% டிக்கெட்கள் இணையதளத்தில் முன்பதிவு; ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

தெற்கு ரயில்வேயில் 2021-22-ம் நிதியாண்டில் 78.5 சதவீதம் டிக்கெட் முன்பதிவு இணைதளம் மூலமாக நடைபெற்றுள்ளது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இந்த முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் 90 சதவீதத்தை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இதன் எல்லையாக தமிழகம், கேரளம், புதுச்சேரி முழுமையாகவும், ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றில் படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலங்களான தமிழகம் மற்றும் … Read more

முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு.. திமுக பாணியை கையில் எடுத்த பாஜக!

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பல்வேறு முடிவுற்ற அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார். இதற்கான நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதன்கிழமை(24.08.2022) காலை 10 மணிக்கு கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சத்து ஏழாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாலை … Read more

காரவள்ளியில் கொடூரம்! சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகன்…!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு செங்காட்டுபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (45) விவசாயி. இவரது மகன் ராஜ்குமார். கடந்த சில வருடங்களுக்கு முன் முதல் மனைவி இறந்து விடவே செல்வராஜ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி பேபிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலம் பிறந்த மகனான ராஜ்குமாருக்கும் தந்தை செல்வராஜ்க்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.  இந்த நிலையில் நேற்று இரவு செல்வராஜ் தனது இரண்டாவது மனைவி பேபியுடன் … Read more

புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை என்று  முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். ஆயுஷ்மான் திட்டத்தை ஜிப்மர் மருத்துவமனை செயல்படுத்தாதது குறித்து விசாரிக்கப்படும் என பேரவையில் ரங்கசாமி உறுதிசெய்துள்ளார்.

மதுரை: சட்ட விரோதமாக மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர் – சமூக ஆர்வலர் புகார்

மதுரையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் புகார் மனு அளித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் முத்துக்குமார் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், மதுரை மாநகர் சோலை அழகுபுரம், 3-வது மேட்டு குறுக்கு தெரு பகுதியில் லதா என்ற பெண் வீட்டிலேயே எந்த வித அனுமதியின்றியும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அவரிடம் சிகிச்சைக்காக வரும் நபர்களுக்கு மாத்திரை, … Read more

‘அந்நியன் பார்த்து வியந்த சிறுமி, இப்போது எனது கதாநாயகி’: நடிகர் விக்ரம் சொன்ன சுவாரசியம்

நடிகர் விக்ரம், கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முன்னணி நடிகர்கள் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடி வருகின்றனர். அந்த வகையில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பட குழுவினர் திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரிக்கு நேற்று(ஆக.23) வந்தனர். கல்லூரிக்கு … Read more

போர்வெல் தண்ணீரில் ஓஎன்ஜிசி ஆயில் கலந்து வருவதாக புகார்.. ஆய்வு செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை..!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் போர்வெல் தண்ணீரில் ஓஎன்ஜிசியின் ஆயில் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குத்தாலத்தில் உள்ள ஓஎன்ஜிசியின் எண்ணெய் எரிவாயு சேமிப்பு நிலையம் அருகே விளாவடி காலனியில் புகழேந்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள போர்வெல் தண்ணீரில் ஓஎன்ஜிசி நிறுவன ஆயில் கலந்து வருவதால் காவி நிறமாக மாறி தண்ணீரின் மேலே ஆயில் மிதந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தங்கள் பகுதியில் நிலத்தடி நீரில் ஓஎன்ஜிசி எண்ணெய் கலந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு … Read more

டெல்லியில் முதல்வர் – இதையும் செய்யலாம்!

‘ஓர் அரிய வாய்ப்பைத் தமிழக முதல்வர் தவற விடுகிறாரோ?’ இந்தக் கேள்வி அடிக்கடி எழுந்த வண்ணம் இருக்கிறது. அரசியல் சந்திப்புகளைத் தாண்டி ஆக்கபூர்வமான அரசு சந்திப்புகள் முதல்வரின் தலைநகர் பயணத்தில் ஏன் இடம் பெறக் கூடாது? பிரதமரைச் சந்தித்து மனு தருவது எல்லாம் சரிதான்; கூடவே தமிழகத்துக்கு என்று சிறப்பு திட்டங்களைத் தயாரித்து, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்களிடம் நேரடியாக பேசி விவாதித்து எடுத்துச் சொல்லி திட்டங்களை முன்னெடுக்கலாம். இதன் மூலம் அபாரமான உடனடிப் பயன்கள் கிடைக்க … Read more

ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை தஞ்சம்: வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை தஞ்சம் அடைந்துள்ளதால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேரண்டப்பள்ளி, காமந்தொட்டி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க  வனத்துறை எச்சரித்துள்ளது.