தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மண்டிக்கிடக்கும் செடி,கொடிகள் அகற்ற வேண்டும்: மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மண்டி கிடக்கும் செடி கொடிகளை அகற்றாததால் வீட்டிற்குள் பாம்புகள் புகுந்து வருகிறது. தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள செடி கொடிகளை அகற்றாததால் வீட்டிற்குள் விஷப் பாம்புகள் புகுந்து வருகிறது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏ, பி, சி, இ, ஆகிய வரிசைப்படி வீடுகள் அடுக்குமாடி … Read more

சென்னை: 2665 கட்டடங்களின் கட்டுமானத்தை நிறுத்த மாநகராட்சி குறிப்பாணை

சென்னையில் 2665 கட்டடங்களின் கட்டுமானத்தை நிறுத்த கட்டட உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி குறிப்பாணை வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதியை சென்னை மாநகராட்சியின் நகரமைப்பு துறை வழங்கி வருகிறது. திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறுபவர்கள் குறிப்பிட்ட அளவு மற்றும் விவரக் குறிப்பின் அடிப்படையில்தான் கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை கண்டறிந்து மாநகராட்சியின் சார்பில் குறிப்பாணை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட … Read more

திருச்சி: மணல் கொள்ளைக்கு எதிராக களம் இறங்கும் கமல்ஹாசன்?

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டங்களில் மய்யம் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோனை, எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. முக்கியமாக திருச்சியில் உள்ள மணல் குவாரிகளை மூடுவது குறித்தும், உத்தமர்சீலி கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை பங்கெடுக்க வைப்பது எனவும் … Read more

திருச்சியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.! போலீசார் விசாரணை.!

திருச்சி மாவட்டத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேஷ்(37). இவரது மனைவி காளீஸ்வரி. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மகேஷ் திடீரென அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவரங்கம் காவல்துறையினர், உயர்ந்த மகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை; திமுக மவுனம் சந்தேகம் தருகிறது: டிடிவி

சென்னை: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அமமுக கட்சி நிறுவனர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரிகள் பலர் மீது … Read more

10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு எப்போது..? – பள்ளி கல்வி துறை அறிவிப்பு..!!

மாநில பாட திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வருகின்ற செப்டம்பர் 26முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 11 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு விடுமுறை ஆகும். பிறகு அக்டோபர் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என … Read more

ATM-ல் 'ஸ்கிம்மர்' வைத்த மருத்துவ மாணவர் – காவல்துறை விசாரணை

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபல வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இயந்திரம் பழுதானதால் அதனை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். அப்போது அங்கிருந்த இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர்  மற்றும் அவருடைய மகன் ஆனந்த் ஆகிய … Read more

ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்

வலங்கைமான்: குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீதக்கமங்கலம் ஊராட்சி மேலராமன் சேத்தி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடவாசல் வட்டம் மேலராமன் சேத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக சீர் செய்த நிலையில் தற்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் … Read more

2 கால்கள் இல்லை! ஆனால் தன்னம்பிக்கையுடன் பதக்கங்களை குவிக்கும் ஓமலூர் மாற்றுத்திறனாளி!

ஓமலூர் அருகே இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்து சாதனை படைத்து வருகிறார். ஏழ்மையில் இருக்கும் தனக்கு அரசு உதவி செய்தால் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் உறுதியுடன் கூறுகிறார் அந்த மாற்றுத் திறனாளி. யார் அவர்? இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி தாலுக்காவில் கஞ்சநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் சித்த கவுண்டர், சேட்டம்மா தம்பதிகளுக்கு ஐந்து ஆண் … Read more

ஓபிஎஸ் அரசியலில் இருக்க எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை: கே.பி.முனுசாமி 

கிருஷ்ணகிரி: ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கே எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், இன்று (21ம் தேதி) பங்கேற்ற கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே அனைவரும் வாருங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தோரணையில் அழைத்திருக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம் … Read more