அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் தற்போதைய பிடன் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா .!!

அமெரிக்காவில் அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தல்கள் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலையும் பாதிக்கலாம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப், பராக் ஒபாமா ஆகியோரும் இந்தத் தேர்தல்களில் அமோக ஆட்சியைப் பிடித்ததற்கு இதுவே காரணம். தற்போதைய அதிபர் ஜோ பிடனின் அதிகாரத்துக்கு இந்தத் தேர்தல்கள் … Read more

அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி – குடியரசு கட்சி இடையே கடும் போட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து வரும் இடைக்கால தேர்தலில் ஜனநாயக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை அங்கு அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும். அதாவது, புதிய அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் கழித்துதான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் ஜோ பைடன் அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ,தற்போது அமெரிக்க இடைக்கால தேர்தல் நடந்து வருகிறது. அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் … Read more

ரஷியா சார்பை குறைத்து கொண்டுள்ளது இந்தியா: அமெரிக்கா

நியூயார்க், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, ஆற்றல் மற்றும் பாதுகாப்பு உதவியில் நம்பகதன்மை வாய்ந்த நாடாக இல்லை என கூறியுள்ளார். உக்ரைனின் நலனில், இந்தியா கவனத்தில் கொண்டு உள்ளது. இதனால், ரஷியாவை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா குறைத்து கொண்டுள்ளது. எனினும், அது இந்தியாவின் சொந்த இருதரப்பு விவகாரம் ஆகும். ரஷிய பயணத்தில், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறிய தகவல்கள், ஐ.நா.வில் … Read more

இங்கிலாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்

லண்டன்: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2021-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் 6-ல் ஒருவர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இங்கிலாந்து மற்று வேல்ஸில் இந்தியர்கள் 1.5 சதவீத எண்ணிக்கையில் உள்ளன. முன்னதாக, 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 75 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு எண்ணிக்கையின்படி … Read more

ட்விட்டரில் அனைவருக்கும் சந்தா கட்டணம்: எலான் மஸ்க் அடுத்த அதிரடி?

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தியுள்ளார். ட்விட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில், பல்வேறு மாற்றங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ட்விட்டர் ஊழியர்கள் பாதிக்கும் மேல் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்கான ப்ளூ டிக்கை பயன்படுத்த மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் … Read more

சூறாவளி எச்சரிக்கை; மீண்டும் தள்ளி போன நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம்

புளோரிடா, அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. எனினும், ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற … Read more

நேபாள நிலநடுக்க பலி 6 ஆக உயர்வு; டெல்லி, உத்தரகாண்டிலும் உணரப்பட்டது

காத்மண்டு, நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன்பின்னர் இன்று … Read more

தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை

கொழும்பு: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. கொழும்பு: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இலங்கை … Read more

சந்திர கிரகணம் – வானில் தோன்றிய அதிசயம்

உலகின் பல்வேறு இடங்களில் இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் தென்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நிகழ்ந்த சந்திர கிரகணம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்பட்டது. அதேபோல், இந்தியாவில் பாட்னா, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களிலும் சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு வியந்தனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் சந்திர கிரகணம் தென்படாத நிலையில், பருவமழையால் மழை பெய்ததால் கிரகணத்தை சரியாக … Read more