அமெரிக்க வான்வழித் தாக்குதல்: சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இரு தலைவர்கள் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் இருவர் அமெரிக்க பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் துணைத் தலைவர் அபு அல் உமாவி மற்றும் மற்றொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டனர். இதில் ஐஎஸ்ஸின் ஆயுதங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க தரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.” என்று செய்தி வெளியிடப்பட்டது. ஐஎஸ்ஸை இந்த பிராந்தியத்திலிருந்து தங்களது நட்பு … Read more