புளோரிடாவை புரட்டி போட்ட இயன் சூறாவளி.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!
அமெரிக்காவின் மோசமான சூறாவளிகளில் ஒன்றாக கருதப்படும் இயன் சூறாவளி மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி புளோரிடாவை புரட்டி போட்டுள்ளது. பல அடி உயரத்துக்கு எழுந்த அலைகளால் கரையோர நகரங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. புயல் காரணமாக சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் கரையோர நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் நகரங்களுக்குள் இழுத்து வரப்பட்டன. Source link