இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. வாரத்தின் நான்கு நாட்கள் மட்டும் அரசு ஊழியர்களுக்கு வேலை, மற்றும் வெளிநாட்டு வேலைக்காக இடம்பெயர விரும்புவர்களுக்கு 5 ஆண்டுகள் ஊதியம் இல்லாத விடுப்பு வழங்கும் முன்மொழிவுகளுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வாரத்தில் பணி இல்லாத மூன்று நாட்கள் பொதுத்துறை அதிகாரிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. Source link