டுவிட்டர் இயக்குநர் குழுவில் இருந்து ஜாக் டோர்ஸி திடீர் விலகல்

கலிபோர்னியா: கடந்த 2006-ஆம் ஆண்டு ஜாக் டோர்ஸி டுவிட்டர் நிறுவனத்தை உருவாக்கியதில் இருந்து அதன் சி.இ.ஓ-ஆக செயல்பட்டு வந்தார்.  இநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது சி.இ.ஓ பொறுப்பை துறந்தார். அதன்பின் இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் முன்வந்தார்.  ஆனால் எலான் மஸ்கிற்கும், டுவிட்டர் சி.இ.ஓ பராக் அகர்வாலுக்கும் தொடர்ந்து … Read more

இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்… கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்த பிறகு, புதிய அரசு அமைக்கப்பட்டது, ஆனால் இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை எந்த விதத்திலும் மேம்படவில்லை . இப்படியே தொடர்ந்தால் பாகிஸ்தான் இலங்கையை போல் திவால் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸின் ட்வீட், பாகிஸ்தானின் அவல நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் … Read more

உபதேசம் வேண்டாம் கூறுகிறது சீனா | Dinamalar

பீஜிங் : சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை குறித்து புகார்கள் உள்ளன. இது தொடர்பாக ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சல் பேச்சலட் சீனாவின் குவான்ஸோ மாகாணம் சென்றுள்ளார். அவருடன், ஷீ ஜிங்பிங் நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக பேசினார்.இதுகுறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சீன அரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக, ஷீ ஜிங்பிங், மிச்சல் பேச்சலட்டிடம் தெரிவித்தார். மேலும், மனித உரிமை மீறல் … Read more

காயமடைந்த வீரர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்..!

உக்ரைன் படைகளுக்கு எதிராக போரிட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய வீரர்களை அதிபர் புதின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதின், அங்கு சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய வீரர்களை சந்தித்து, கைகளை குலுக்கி அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்தார்.  Source link

உலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிப்பு – ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

லண்டன்: உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது.  குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம். காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக … Read more

மங்கிபாக்ஸ் வைரஸ் 19 நாடுகளுக்கு பரவல்| Dinamalar

வாஷிங்டன் : கொரோனாவை தொடர்ந்து ‘மங்கிபாக்ஸ்’ என்ற அம்மை நோய், 19 நாடுகளில், 131 பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து புளும்பெர்க் நிறுவனத்தின் மூத்த மருந்தியல் ஆய்வாளர் சாம் பசேலி கூறியதாவது: மங்கிபாக்ஸ் நோய், தட்டம்மை, பெரியம்மை போன்றது தான். இதில் உயிரிழப்பு மிகக் குறைவானது. இருபது ஆண்டுகளுக்கு முன் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் மங்கிபாக்ஸ் வைரஸ் காணப்பட்டது. கடந்த, 2003ல் அமெரிக்காவில், 71 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. … Read more

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 குண்டு வெடிப்புகள்… 16 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் காயம் அடைந்தனர். ஷியா பிரிவினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மசூதியில் மாலை நேரத் தொழுகை நடந்த போது குண்டு வெடித்தது. இதே போல்  Mazar-i-Sharif நகரில் 3 மினி பேருந்துகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.தாஹேஷ் இயக்கத்தின் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. Source … Read more

டெக்சாஸ் தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – உலகை உலுக்கிய சம்பவத்தின் முழு விவரம்

டெக்சாஸ்: அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். அமெரிக்காவில் அவ்வப்போது பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ராப்என்ற பெயரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு … Read more

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தீவிர தாக்குதலில் ரயில் இருப்பு பாதை கடும் சேதம்.!

உக்ரைனின் டொனெஸ்க் பகுதியை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், அங்குள்ள ரயில் இருப்பு பாதை உருக்குலைந்திருப்பதை காட்டும் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன. போக்ரோவ்ஸ்கில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரயில் இருப்பு பாதைகள் சிதைந்து சின்னாபின்னாமாகி கிடக்கின்றன. Source link

இலங்கையில் வாகனங்களின் விலை கடும் உயர்வு

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு,  விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் விற்பனை விலையும் தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதன்படி இலங்கையில் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட சாதாரண ஸ்கூட்டர், மோட்டார்  சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல முன்னணி கார்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்படி முன்னணி … Read more