தீபாவளிக்கு வெளியாகும் கார்த்தியின் சர்தார்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போது 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் ஆகியோர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் .

அமேசான் வரலாற்று வீழ்ச்சி.. 7 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்..!

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் யாரும் எதிர் பார்க்காத வகையில் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. டெக்னாலஜி தான் எல்லாம், ஆன்லைன் சேவைகள் தான் இனி எதிர்காலம், ரீடைல் விற்பனை கடனை அனைத்தும் இனி தேவையில்லை எனக் கூட்டம் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அமேசான் 7 வருடத்தில் முதல் முறையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது அமேசான் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல், அமேசான்-ஐ நம்பி முதலீடு செய்த … Read more

மே மாதம் 02 ஆம் திகதி விஷேட அரச விடுமுறை தினம்

மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

முடிந்தால் ஓவியத்தில் மறைந்திருக்கும் 9 முகங்களை கண்டுபிடியுங்கள்!

சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிலிருக்கும் 9 முகங்களை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யப்போகும் மாவட்டங்கள்..!!

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி), சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் … Read more

"ஒடுக்குதலைப் புரிந்துகொள்ளவும், எதிர்கொள்ளவும் எனக்கு இலக்கியமே உதவியது!"- மனம் திறந்த பா.இரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக மதுரையில் நேற்றும், இன்றும் தலித் எழுத்தாளர்களுக்கான வானம் கலைத் திருவிழா, வேர்ச்சொல் தலித் இலக்கிய சூடுகை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் பா.இரஞ்சித் நேற்று மனம் விட்டுப் பேசியதிலிருந்து… “இந்த எழுத்துக் கூடுகைக்கு வந்திருக்கிற நீங்க எல்லோருமே என்னை செதுக்கிய, செதுக்கிக் கொண்டிருக்கிற ஆசான்கள்னுதான் சொல்லணும். நீங்கள்தான் … Read more

வனப்பகுதிகளை அழிக்க நினைப்பது மனித அழிவுக்கு வழிவகுக்கும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

வனப்பகுதிகளை அழிக்க நினைப்பது மனித அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இயற்கையை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதி, இயற்கையான சூழல் என்பதே மனிதனின் அடிப்படை உரிமை என்றார். பல்லுயிர் பெருக்கம், ரியல் எஸ்டேட், சுரங்கங்கள் மற்றும் அணைகள் கட்டுவது ஆகியவற்றுக்காக காடுகள் அழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்தியாவில் 5சதவீதம் வனப்பகுதிகள் மட்டுமே … Read more

"சமூக சமத்துவம் காண்போம்" – தொழிலாளர் தினம்: தமிழகத் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தொழிலாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்: “வயல் வெளிகளில் விளைந்து நிற்கும் மணிகளாக, எழிலார் சேவைகளில் பூத்துக் குலுங்கும் மலர்களாக, ஓடும் நதிகளின் … Read more

அயோத்தி மசூதிகளில் ஆட்சேபகரமான பொருட்களை வீசி கலவரம் தூண்ட முயற்சி: முஸ்லிம்கள் போல் வேடமிட்டு வந்த 7 பேர் கைது

புதுடெல்லி: அயோத்தி மசூதிகளில் மதநம்பிக்கைக்கு எதிரானவற்றை வீசி கலவரம் தூண்ட முயற்சி நடந்தது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2 மசூதிகளில் மத நம்பிக்கைக்கு எதிரான பொருட்களை ஒரு கும்பல் நேற்றுமுன்தினம் இரவு வீசிவிட்டு தப்பியது. முஸ்லிம்கள் போல் வேடமிட்டு 8 பேர் இரு சக்கர வாகனங்களில் வந்து பொருட்களை வீசி சென்றனர். இதுதொடர்பாக தகவல் அறிந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மசூதிகளை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு … Read more

பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது – ஜனாதிபதி அறிவிப்பு

சகலரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்கத் தயார் எனவும், ஆனால் பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும், அவ்வாறு செய்வது நாட்டை சீர்குலைத்து பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 11 சுயேச்சைக் கட்சிகளுடன் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமரை நீக்கினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போகும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, அது … Read more