எனக்கு அந்த நடிகர் மீது பயங்கர கிரஷ் இருந்தது. அந்த சம்பவத்தால் மனம் உடைந்து விட்டேன்.. மனம் திறந்த பூஜா ஹெக்டே!

பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? பூஜா ஹெக்டே’ மாஷபிள் இந்தியா உடனான தனது சமீபத்திய நேர்காணலில், தான் பல தென்னிந்திய படங்களில் பணிபுரிந்ததால், எல்லாரும் தன்னை தென்னிந்தியாவைச் சேர்ந்தவள் என்று எப்படிக் கருதுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார். மேலும், ஹிருத்திக் ரோஷன் கூட தன்னை தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று நினைத்ததாகக் கூறினார். இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பூஜா, “நான் மும்பையில் பிறந்து வளர்ந்தேன். நான் ஹிருத்திக்குடன் மொஹஞ்சதாரோ … Read more

ஏழைகளுக்கு உயர் கல்வி: டி.பி. ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! 

சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கலை – அறிவியல் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக்குறைந்த செலவில் உயர்கல்வி கிடைப்பதை தடுப்பதற்கான இந்த முயற்சியை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கவலை அளிப்பதாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் செயல்பட்டு … Read more

“மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து" – மலையாள இயக்குநர் சனல் குமாரின் அதிர்ச்சிப் பதிவு!

சனல் குமார் சசிதரன் Oraalppokkam, ஒழிவு திவசத்தே கழி, செக்ஸி துர்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். மஞ்சு வாரியர் நடித்த Kayattam என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பாக அவரது பேஸ்புக் பதிவில், “மஞ்சு வாரியார் உயிர் ஆபத்தில் இருக்கலாம். அவர் பிணையாக வைக்கப்பட்டுள்ளார். சொந்த முடிவுகளை எடுக்கக்கூட அவரை அனுமதிப்பதில்லை” எனப் பகிர்ந்திருந்தார். மேலும் மஞ்சு வாரியர் உடன் Kayattam படப்பிடிப்பின்போது கூட அவரிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும் பினேஷ் சந்திரன் மற்றும் பினு … Read more

'சமத்துவம் தழைக்கட்டும், சகோதரத்துவம் நிலைக்கட்டும்' – தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

சென்னை: இஸ்லாமிய பெருமக்கள் நாளை (மே 3) புனித ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ஒருசில பகுதிகளில் இன்றும் சில இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி … Read more

வழிபாட்டுத் தலங்களிலிருந்து 54,000 ஒலிப்பெருக்கிகள் அகற்றம்: உ.பி. அரசு அறிக்கை

லக்னோ: மசூதிகள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களிலிருந்து 54,000 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் 60,200 ஒலிப்பெருக்கிகளை எந்த ஒலியளவில் இயக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மசூதிகள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் இருந்து இதுவரை 53,942 ஒலிப்பெருக்கிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். மேலும், 60,200 ஒலிப்பெருக்கிகளின் ஓசையளவைக் குறைத்துக் கட்டுப்படுத்தியுள்ளோம். பெரேலி பகுதியில் மட்டும் 16,682 ஒலிப்பெருக்கிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு … Read more

ரூ.61 ஆயிரம் கோடி நிதியுதவி: கடன் வாங்க சவுதியில் காத்திருக்கும் பாகிஸ்தான் நிதியமைச்சர்

இஸ்லாமாபாத்: கடும் நிதிநெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.61 ஆயிரத்து 218 கோடி நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் நிதியமைச்சர் சவுதி அரேபியாவில் தங்கியுள்ளார். பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி … Read more

'தடுப்பூசி போட கட்டாயப்படுத்த கூடாது' – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பொது மக்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என, பல்வேறு மாநில அரசுகள் அரசாணை வெளியிட்டு இருந்தன. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்றும் மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. இதற்கிடையே, மாநில அரசுகளின் உத்தரவுகளை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று, உச்ச … Read more

சீனாவில் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்புப் பணி தீவிரம்

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அங்கு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சாங்ஷா நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த 29-ஆம் தேதி மதியம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் மாயமான நிலையில், 16 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் மீட்புப் பணியில், ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவசரகால மீட்புப் … Read more

பள்ளி பாடப்புத்தகங்களில் ஒன்றியஅரசு என்ற வார்த்தை 2023-24 கல்வி ஆண்டில் திருத்தப்படும்! லியோனி

சென்னை: பள்ளி பாடப்புத்தகங்களில் மத்தியஅரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை 2023-24 கல்வி ஆண்டில் திருத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தலைவரான திண்டுக்கல் லியோனி தெரிவித்த உள்ளார். திமுகவின் நட்சத்திர பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனினை கடந்த அண்டு ஸ்டாலின் தலைமையிலான  தமிழகஅரசு  தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமனம் செய்து கவுரப்படுத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லியோனி , மாணவர்கள் கல்வியை சுமையாக நினைக்காமல், மகிழ்ச்சியாக … Read more

உக்ரைன் எல்லையிலுள்ள ரஷ்ய ஆயுதக்கிடங்கை சுற்றி வரும் ஹெலிகொப்டர்கள்… திடீரென பற்றிய தீ: தொடரும் மர்மம்

உக்ரைன் எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய ஆயுதக்கிடங்கு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே, உக்ரைன் எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய கிராமங்கள் சிலவற்றில் அவ்வப்போது மர்மமான முறையில் திடீர் திடீரென வெடி விபத்துக்களும், தீ விபத்துக்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கடந்த மாதம் Belgorod என்ற இடத்தில் அமைந்துள்ள எண்ணெய்க்கிடங்கு ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிய, உக்ரைன், ஹெலிகொப்டர் மூலம் அதைத் தாக்கியதாக ரஷ்யா குற்றம் சாட்ட, உக்ரைன் மறுக்க, இதே நிலை தொடர்கிறது. … Read more